பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



89 ஒருதலை. எனவே, ஏர் என்னும் அவ்வைப்புத்தலம் யாண்டையது? எனின் அஃது இன்னம்பர்நாட்டு ஏராகிய மும்மடி சோழமங்கலம்' என்று கல்வெட்டுக்களிற் குறிக்கப்பெற்று -இதுபோது ஏரகரம், ஏராரம் என்ற பெயர்களுடன் கும்பகோணத்திற்கு வடபால் இரண்டு மயில் தூரத்தில் உள்ள ஊரேயாதல் வேண்டும். இனி, ஏரகரம் திருக்கோயிலிற் காணப்பெறும் அக்கல்வெட்டு, அவ்வூர் இன்னம்பர் நாட்டில் உள்ளது என்பதையும், பழைய காலத்தில் ஏர் என்னும் பெயருடன் நிலவியது என்பதையும், அதற்கு மும்மடிசோழமங்கலம் என்ற வேறொரு பெயரும் அந்நாளில் இருந்தது என்பதையும் நன்கு புலப்படுத்துகின்றது. இவ்வின்னம்பர் நாடு பண்டைக்காலத்திற் சோழமண்டலத்திற் காவேரிக்கு வடகரையிலிருந்த பலநாடுகளுள் ஒன்றாகும்; இஃது இன்னம்பரைத் தலைநகராகக் கொண்டது. கும்பகோணந்தாலூகாவில் உள்ள கொட்டையூர், மேலக்காவேரி, கருப்பூர், அசுகூர், ஏரகரம் முதலான ஊர்களையும் பாவநாசந் தாலூகாவில் உள்ள ஆதனூர், மருத்துவக்குடி முதலான ஊர்களையும் தன்னகத்துக்கொண்டு இவ்வின்னம்பர் நாடு முற்காலத்தில் விளங்கிற்று என்பது பல கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. எனவே, தற்காலத்தில் இந்நாடு கும்பகோணம், பாவநாசம் தாலூகாக்களில் அடங்கியுள்ள ஒருபகுதி எனலாம். இன்னம்பர்நாட்டில் உள்ளதென்று கல்வெட்டுக்களால் அறியப்படும் ஏர் என்னும் திருப்பதி இந்நாளிலும் இன்னம்பருக்கு அணித்தாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. அன்றியும், அத்தலத்தைத் தம் திருப்பதிகங்களிற் கூறியுள்ள திருநாவுக்கரசு சுவாமிகள் 'இன்னம்பர் ஏர்' என்வும் 'ஏரார் இன்னம்பரார்' எனவும் அதனை இன்னம்பருக்கு அணித்தாகவைத்துக் கூறியிருப்பதும் ஈண்டு அறிந்துகொள்ளற்பாலதாகும். இனி, முதல் இராசராசசோழனால் எடுப்பிக்கப்பெற்ற தஞ்சை இராசராசேச்சுரத்தில் உள்ள கல்வெட்டு ஒன்று ஏர் என்னும் திருப்பதி இன்னம்பர்நாட்டில் உள்ளது என்று உணர்த்துகின்றது. அது ராஜேந்திரசிங்க வளநாட்டு இன்னம்பர்நாட்டுப் பழைய வானவன்மகாதேவிச் சதுர்வேதிமங்கலத்துச் சபையார் இடக்கடவ திருமெய்காப்பு ஒன்றும் (எ ) இந்நாட்டு அசுகூர் சபையார் இடக்கடவ திருமெய்காப்பு ஒன்றும் (எஉ) இந்நாட்டு ஏராகிய மும்மடி சோழமங்கலத்தார் இடக்கடவ திருமெய்காப்பு ஒன்றும் (எங) இந்நாட்டு ஸ்ரீபராந்தகச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் இடக்கடவ திருமெய்காப்பு இரண்டும் (South Indian Inscriptions Volume II. No. 70) என்பதாம். தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள இக்கல்வெட்டும் இன்னம்பருக்கு அண்மையில் உள்ள ஏரகரத்தில் அமைந்துள்ள கோயிலிற் காணப்படும் கல்வெட்டும் தம்முள் ஒற்றுமையுடையனவாய் ஏர் என்ற ஊர் இன்னம்பர்நாட்டில் உளது என்றுணர்த்துதல் காண்க. ஆகவே, ஏர்