92 | 'உள்ளும் புறம்புங் குலமரபி னொழுக்கம் வழுவா வொருமைநெறி கொள்ளுமியல்பிற் குடி முகலோர்மலிந்த செல்வக் குலப்பதியாந் தெள்ளுந் திரைகண் மதகுதொறுஞ்சேலுங்கயலும் செழுமணியுந் தள்ளும் பொன்னி நீர்நாட்டு மருக னாட்டுத் தஞ்சாவூர்' பெரியபுராணம் - செருத்துணைநாயனார் புராணம், பா.1. என்பன. இவற்றால் செருத்துணையாரது திருப்பதி சோழமண்டலத்தில் உள்ள மருகல் நாட்டுத் தஞ்சாவூர் என்பது வெளியாதல் காண்க. - இனி சோழமண்டலத்தில் தஞ்சாவூர் என்று வழங்கப் பெற்றுவரும் இரண்டு ஊர்களும், ஒன்று விசயாலயன், முதற் பராந்தகன், முதல் இராசராசன் முதலான சோழமன்னர்கள் வீற்றிருந்து செங்கோலோச்சிய திருவுடைமாநகரமாகும். இம்மாநகர், தஞ்சாவூர்க் கூற்றத்தில் உள்ளது என்பது பாண்டிய குலாசனி வளநாட்டுத்தஞ்சாவூர் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீ இராஜராஜே சுவரமுடையார்க்கு நாம் கொடுத்தன...' என்னும் தஞ்சைப் பெரியகோவிற் கல்வெட்டால் புலப்படுகின்றது. ஆகவே, தஞ்சாவூர்க் கூற்றத்திலுள்ள இத்தஞ்சாவூர் செருத்துணைநாயனாரது திருப்பதியன்று என்பது திண்ணம். சோழமண்டலத்தில் க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டின் உள்நாடுகளுள் ஒன்றாகிய மருகல் நாட்டில் ஒரு தஞ்சாவூர் உளது என்பது க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டுமருகல் நாட்டு மருகல்சபையார் இடக்கடவ திருமெய்காப்பு ஒன்றும்... இந்நாட்டு வைப்பூர் ஊரால் இடக்கடவ திருமெய்காப்பு ஒன்றும் இந்நாட்டு தஞ்சாவூர் ஊரார் இடக்கடவ திருமெய்காப்பு ஒன்றும் என்ற கல்வெட்டினால் தெரிகின்றது. (South Indian Inscriptions Vol II, Ins No.70.) இச்செய்தி மற்றொரு கல்வெட்டாலும் உறுதியெய்துகின்றது. அது, (1) 'திருவாய்க்கேள்வி முன்னாக திருபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 2-ஆவது ஆடிமாசம் செவரன்மேடான அகரநகரீசுவரச் சதுர்வேதிமங்கலத்து ஸ்ரீ மூலஸ்தான முடையார் கோயிலிற் செம்பாதி கானியுடைய (2) சிவப்பிராமணன் காசிபன் இருஷப தேவ பட்டனேனும் இந்த ஸ்ரீ மூலஸ்தான முடையார் கோயிலிற் மற்றைச் செம்பாதி காணியுமுடைய இக்குடி மகாதேவபட்டனுள்ளிட்ட அனைவோமும் சோழமண்டலத்து மருகல் நாட்டுத் தஞ்சாவூர் தஞ்சாவூர் கிழவன் உலகளந்தா (3) ன் அகமுடையாள் உய்யகொண்டாள் பக்கற் காணி ஒகரியிலே நாங்கள் கொண்ட பழங்காக இக்காசு மூன்றுக்கும் பலிசை நிசதிச் செலவாக இத்தேவர்க்கு அந்தியம் போது ஏற்றி இச்சந்தியிற் பேரமுது செய்த இத்தனையுஞ்செல்ல நாங்களும் 1. South Indian Inscriptions, Vol. 11. Ins. No.1.