பக்கம்:சதுரங்கம் விளையாடுவது எப்படி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

7



விளையாட்டுத் துறை பற்றிய கருத்துக்களை வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் வார, மாதப் பத்திரிகைகளில் கட்டுரைகள், சொல்லோவியங்கள், கவிதைகள் எழுதி, தான் மேற்கொண்ட பணியை மேலும் சிறப்புறத் தொடர்ந்து வந்தார்.

விளையாட்டுப் பந்தயங்களில் பயிற்சி பெறுபவராக, பயிற்சி தருபவராக, விளையாட்டுப் பந்தயங்களை நடத்துபவராக, மற்றும் பார்வையாளராக இருந்து, தான் பெற்ற அனுபவங்களின் சாரமாகவே, ஆசிரியரது நூல்கள் அமைந்தன.

'திருக்குறள் புதிய உரை என்னும் நூலில் திருக்குறள் ஓர் உடலியல் பற்றிய உன்னத உடல் நல ால் என்று புதிய விளக்கத்துடன் திருக்குறளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உரை எழுதி தமிழ் இலக்கியத்திற்கு பெருமை அளித்துள்ளார்.

1960-களில் விளையாட்டுத்துறை தமிழ் இலக்கிய நூல்களை எழுதி தமிழ் மக்களுக்கு படைத்த டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் கடந்த 7-4-2001ல் முயற்கையோடு இணைந்து, தமிழ் நெஞ்சங்களில் வாழ்கிறார் என்னும் பெருமையோடு அவரது நூல்களை தொடர்ந்து வெளியிடுவதில் மகிழ்கிறாம்.

சாந்தி சாக்ரட்டீஸ்

பதிப்பாளர்