பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 9 3 மோகினி சட்டென்று குனிந்து அவர் காலைத் தொட் டாள். அவர் தூக்கி நிறுத்துவார் என்று எதிர்பார்த்தாள், அவர் குத்துக்கல் மாதிரி நின்றுகொண்டே இருந்ததால், மோகினி சுயமாகவே எழுந்தாள். அவர் முகத்தை நேராகப் பார்த்தாள். அவர் முகம் உணர்ச்சிவசமாகிக் கொண் டிருந்தது. மோகினி உணர்ச்சிகளைக் கொட்டினாள் காலுல ஏற்பட்ட காயம் இன்னும் ஆறலியாமே! டயாபெடிஸ்ஸா இருந்தாலும் இருக்கப் போவுது. எதுக்கும் டாக்டர் கிட்ட செக்கப் பண்ணுங்கோ மாமா!' அருணாசலம் பதில் சொல்வதற்கு முன்னதாகக் கன்கம்மா முந்திக்கொண்டு, அதை ஏன் கேக்குற? டாக்டர் என்கிற வார்த்தய கேட்டாலே எரிஞ்சி விழுறார். போன வாரம் இப் படித்தளன்...' என்று இழுத்து இழுத்துப் பேசப் போனாள். அருணசலத்திற்கு அவள் பேச்சு சங்கடமாக இருந்ததோ அல்லது ஒரு சாக்காக இருந்ததோ தெரியவில்லை. சரி... சரி... உன் புகாருங்களை வெளில போயி பேசு' என்றார் சிறிது கடுகடுப்புடன். மோகினிக்கு, அவர் அவளிடம் பேசாதது ஏமாற்றந்தான். கணவனின் இயல்பை உணர்ந்து வைத் திருந்த கனகம்மா, மோகினியின் தோளைக் கையால் தட்டி, கண்ணால் சைகை செய்து வெளியே வந்தாள். மோகினி கிழவனாரை நோட்டம் விட்டுக்கொண்டே பின் னால் வந்தாள். அதுவரை அவள் பிரிவைத் தாங்கியது பெரிய விஷயம் போல் உஷாவும், கமலாவும், சபாபதியும் மோகினியை மொய்த்துக் கொண்டார்கள். சீனிவாசன் அவர்களை ஒரு தடவையும், தன்னை ஒரு தடவையும் பெருமையாய்ப் பார்த்துக்கொண்டான். அவன் இப்போது டைட் பேண்டில் இருந்தான்.