பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 க. சமுத்திரம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருவரும் பி.ஏ. படித்துக்கொண் டிருந்ததை நினைத்துப் பார்த்தான். கண்டோர் சுருண்டு விழும்படி காட்சியளித்த மோகினி யின் பார்வைக்காக, கல்லூரி ஆசிரியர்கள் கூட ஏங்கினார் களாம். அவள் திட்டினால்கடப் பரவாயில்லை. அதுவும் பேச்சுத்தானே' என்றுகூட பல மாண்வர்கள் அட்டம்ப்ட்' செய்வார்கள் இனிவாசன் நினைத்துப் பார்த்துச் சிரித்துக்கொண்டான். சுருட்டுக் கிராப்பன் சுர்ேஷ-க்காக, பல பெண்கள் தவங் கிடந்தபோது, அவன் இந்த மோகினிக்காக தவங் கிடந் தான். ஒருநாள் அவன் பேச முயற்சித்தபோது, இவள் ஸ்டுபிட்' என்று சொல்லிவிட்டாள். அதிலிருந்து சக மாண வர்கள் அவனை ஸ்டுபிட் சுந்தரம்' என்றார்கள். இதே போல், ஒரு டாக்டரின் மகன்-பளபளப்பான ஆடை களுக்குள் பளபளப்பாக மினுங்கும் பையன். இவளுக்கு ஒரு காதல் கடிதம் எழுத, அதை அவள் சுக்கு நூறாகக் கிழித்து அவன் தலையில் பப்ளிக்காகப் போட்டாள். முடிவு அவன் பேப்பர் தலைவன்' என்று பெயர் வாங்கினான். அவள். அந்தக் கல்லூரியில் காலெடுத்து வைப்பதற்கு முன்பு வரை, மாணவர்கள் ஒருவருக்கொருவர் ரெட்டை மண்டையன்’ பேஜ்ஜி உதடன் என்று செல்லப் பெயர்களை வைத் திருந் தார்கள். வந்ததும், இவள் அவர்களை எந்த முறையில் நடத்துகிறாளோ, அந்த முறையில் பெயர் வைக்கத் துவங்கி விட்டார்கள். இவளை மொய்த்துக்கொண்டிருந்த பெரிய இடத்துப் பையன் ஒருவனை, ஒனக்கெல்லாம் அக்கா தங்கை இல்லியா என்று கேட்டாள். அன்றிலிருந்து அவன் அக்கா தங்கை இல்லாதவன்” என்று அழைக்கப்பட்டான். இப்படித் தன்னைவிட வலுவிலும் வளத்திலும் வாழ்க்கை முறையிலும் மேம்பட்ட பலரைத் துச்சமாக மதித்துவிட்டு, தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்த