பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 97 தன்மீது அவளுக்குக் காதல் ஏற்பட்டதை நினைக்கும்போது, இப்போதும் சீனிவாசன் ஆச்சரியப்பட்டான். இவ்வளவுக்கும் அவளே அவனிடம் வலியப் பேசி வசீகரித்தாள். அவனை •டப்பா" என்று இடுகுறிப் பெயரில் அழைத்த மாணவர்கள், அவனை அவள் காதலிக்க முடியாது என்று திட்டவட்டமாக நம்பியதுடன் இருவர் சந்திப்பதையும், கிசுகிசு பேசுவதையும் பார்த்துவிட்டு, எவனுக்கோ... லவ் லெட்டர் கொடுக்கத் தான் இவள் இந்த டப்பாப் பையனை பயன்படுத்துகிறாள்" என்று பேசிக்கொண்டதும் அவனுக்குத் தெரியும். இந்தப் பேச்சை அவன் அவள் காதில் போட்டதும், நீங்களா டப்பா... இல்லை மோகன் டப்பா: அவனோட அப்பா டப்பா' என்று சொன்னதுடன், சொன்னவர்களை டப்பாய்க்கக் கூட’ப் பார்த்தாள். சீனிவாசன் வாய்விட்டே சிரித்தான். எஞ்ஜினியராக அங்குமிங்கும் சுற்றிவிட்டு, இப்போது ஒய்வு பெற்றுச் சென்னையில் செட்டிலான அப்பாவிடம், தன் காதல் விவகாரத்தை அம்மா மூலம் தெரியப்படுத்தி, தந்தையின் வேண்டா வெறுப்பான அனுமதி வாங்கி மோகினியை வீட்டிற்குக் கூட்டி வந்திருத்தான். எல்லோருக்குமே அவளைப் பிடித்துவிட்டதை நினைத்து சந்தோஷப்பட்டு, தன்னை இவளுக்கு எப்படிப் பிடித்தது என்று சந்தேகப்பட்டும், பெருமிதப்பட்டும், பின்னர் அவள் தன்னுடன் காலம் முழுவதும் காலத்தைக் கழிக்கப் போகிறாள் என்ற கற்பனை சுகத்தில், கண்ணுக்குத் தெரிய மல் மோகினி' என்று சொல்லிக்கொண்டே, அவள் தோளைப் பிடித்தான். அவள் சீறினாள். தொட்டுத் தாலி கட்டுமுன்ன என்னை தொடக் கூடாதுன்னு எத்தன தடவை சொல்றது?’’ 学。ー7