பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 சு. சமுத்திரம் அதனாலதான் இப்ப தொட்டேன். அப்புறமா தாலிய கட்டுறேன்.' ஆமாம். என்னப்பத்தி நீங்க என்ன நினைச்சிருக் கிறீங்க? ஒங்க வீட்டுக்கு வந்ததுனால தொடலாமுன்னா? நான் இனிமே ஒங்க வீட்டுக்கு வரமாட்டேன்!' சீனி நடுங்கிப் போனான். மெளனமாகக் காரை ஒட்டினான். அவள் வீட்டு முன் கார் நின்றபோது, உள்ளே ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்திருந்த அவள் தந்தை ஏகாம்பரம், வெத்திலை பாக்கு டப்பாவை மடியில் வைத்துக் கொண்டு அதை லேசாகத் தட்டிக்கொண்டு இருந்தவர், * வாங்கோ...மாப்பிள்ளை1 உள்ளே வந்துட்டுப் போங்க. ’’ என்றார். இதுவரை அவர் அவனை மிஸ்டர் சீனிவாசன் என்று அழைத்தவர், இப்போது மாப்பிள்ளை' என்று சொன்னதைக் கேட்டதும், மோகினி உம் மென்று உட்கார்ந்திருந்த சீனிவாசனின் விலாவில் செல்லமாக இடித் தாள். அவனுக்குப் போன உயிர் திரும்பவந்தது. 'நீ மட்டும் என்னைத் தொடலாமா?' என்று கேட்கலாமா என்று கூட நினைத்தான். கூடாது. சரியான வீம்புக்காரி. ஒஹோ... அப்படியா? ஒங்க வாடையே வேண்டாம்" என்று சொல்லி விட்டு விலகக்கூடியவள். கீழ்ப்படிதலான டிரைவர்போல அவன் அவளுக்குக் கார்க் கதவைத் திறந்துவிட்டான். இருவரும் வீட்டுக்குள் வந்தார்கள். வருங்கால மாமனாருடனும், உள்ளே இன்னொரு அறையில் எட்டி எட்டிப் பார்த்துக் கொண் டிருந்த நோயாளி மாமியாருடனும் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சீனிவாசன் வெளியே வந்தான். மோகினி அவன் காரை ஸ்டார்ட் செய்த வரைக்கும் அருகிலேயே நின்றாள். கார் இரண்டடி நகர்ந்தபோது, அவள் நாலடி துள்ளி, ஜாக்கிரதையா வண்டி ஒட்டுங்கோ: உங்களுக்கு ஒண்னுன்னா என்னால உயிரோட இருக்க