பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 சு. சமுத்திரம் அப்பாவை எதிர்த்துப் பேசிய உஷாமட்டும் சீனிவாசன் கைகளைப் பிடித்து பின்னுக்குத் தள்ளி ஒனக்கு கொஞ்ச மாவது சென்ஸ் இருக்கா அண்ணா! அவரு ஏற்கெனவே நோயாளி தெரிஞ்சும் இப்டி பேசினா...' என்று சொன்ன போது கனகம்மாளுக்குப் பயம் பிடித்துவிட்டது. மகன் கொடுத்த அட்டாக்கில் அவருக்கு மீண்டும் அட்டாக்" வந்தால்... - சஏண்டா... நேருக்கு நேரா பேசுற அளவுக்கு தைரியம் வந்துட்டுதா ! இதவிட அவரைக் கொன்னுருக்கலாண்டா!' கனகம்மாள் கட்சி மாறி கணவனுக்கு அருகே போய் நின்றுகொண்டாள். அந்தச் சமயத்திலும் எல்லோருக்கும், * சீனனா இந்த அளவுக்குப் பேசுறான்? அவனுக்கா இவ்வளவு தைரியம்’ என்று நினைத்து, பிறகு அதே தைரியத்தை திமிராகவும், தான்தோன்றித்தனமாகவும் பிறரைப்பற்றிக் கவலைப்படாத சுயநலமாகவும் பரிணாமப்படுத்திக் கொண் டார்கள். குடும்பத்தினர் இப்படி திடீரென்று பல்டி அடித் ததில் சீனிவாசன் அதிர்ந்துபோனான். பிறர் ஒப்புதல் அளித்தாலொழிய தன் முடிவு நல்ல முடிவாக இருக்க முடியாது என்று தனக்குள்ளேயே ஒரு காம்ப்ளெக்ஸை" தான் கொண்ட காதல் அளவிற்கு வளர்த்திருந்த அவன் சற்று நிலைதடுமாறி தந்தையிடம் மன்னிப்புக் கேட்கலாமா என்று கூட நினைத்தான். அருணாசலம் அவன் மன்னிப்புக் கேட்பதற்காக அங்கே நிற்கவில்லை. மெளனமாக அவனை ஏற இறங்கப் பார்த்தார். தன் பையன் கொஞ்சம் கோபக்காரன்தான் என்பதில் அந்த தந்தையுள்ளம் அவரை அறியாமலே லேசாகப் பெருமைப்பட்டுக்கொண்டது. இந்த விபரீத’ மனோபாவத்தை நொடியில் புரிந்துகொண்ட அவர் அதை மறைக்கும் வேகத்திலோ அல்லது மறக்கும் வேகத்திலோ சீனிவாசனைப் பார்த்து ஒண்ணுமட்டுஞ் சொல்றேண்டா...