பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 சு. சமுத்திரம் பப்ளிவிட்டி மானேஜர் சுந்தரத்திற்கும் அளிஸ்டெண்ட் பப்ளிஸிட்டி மானேஜருக்கும் ஆகாது என்பது அவளுக்குத் தெரியும். அதோடு, சீனிவாசனின் சகிளாஸ் மேட்டான" அளிஸ்டெண்ட் பப்ளிஸிட்டி மானேஜர், அவள் புருஷனை, காதுக்குக் கேட்கும்படியாகவே கிண்டல் செய்திருக்கிறான். அவனுடைய வேலையை அபகரித்துக் கொள்வதில் தப்பில்லை. எப்படி தப்பில்லை? பாவம்! அவன், என்ன செய்வான். என்ன வேணுமுன்னாலும் செய்யட்டும்... சாமர்த்தியக்காரன். அதோடு ஆண்பிள்ளை, அவனுக்கு வேற வேலை கிடை. க்கும். இன்னும் ஒரு மாதத்தில் கேஷவல் வேலை முடிந்துவிடும். அதற்குள் கரு நான்கு மாதமாகிவிடும். பிறக்கப்போகிற குழந்தைக்கு, பிறப்பித்த தந்தைக்கு, சில்லறைச் செலவுக்கு, பிறவி எடுத்ததே நோயில் படுக்கத்தான் என்பதுபோல் இருக்கும் அம்மாவுக்கு, கோர்ட் டுக்குப் போகப் பணம் கேட்கும் கணவனுக்கு, எல்லா வற்றிற்கும் மேலான இவர் க ள் வயிற்றுக்கு, எதைப் போடுவது? மோகினி, சிந்தித்தாள் இறுதியில் அவள் முகம் இறுகியது. அஸிஸ்டெண்ட் மானேஜர் பதவியை முடிந்தால் வாங்கிக் கொள்ளவதும், முடியாது போனால், பப்ளிவிட்டி அஸிஸ்டெண்ட் பதவியாவது வாங்கியே தீருவது என்ற உறுதியும் தன்னம்பிக்கையும் அவள் மனதில் பிறந்தன. கண்ணாடியில் தன் முகத்தையே உற்றுப் பார்த்தாள். பின்னர், தன் வயிற்றையும் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். தன் குஞ்சுகள் குது கலகமாகத் தின்ன வேண்டும். என்பதற்காக, கோழிக் குஞ்சைக் குறிபார்க்கும் கழுகின் பார்வை அது. பழைய தலைமைக் குரங்கால் கருவுற்று, பின்னர் அதை விரட்டிவிட்டு, புதிதாகத் தலைமையேற்ற