பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 சு. சமுத்திரம் எடுத்து, தனியாகவும். சில வெளிநாட்டுக் கம்பெனிகளுடன் இணைந்தும், பல வேலைகளைப் பூர்த்தி செய்து, அந் நிய செலாவணியை அதிகமாகச் சம்பாதித்துக் கொடுப்பதால், அரசாங்கத்திற்கு அது ஒரு செல்லப்பிள்ளை மாதிரி. என்ஜினியர்கள், சார்ட்டர்ட் அக்கெளண்டண்ட்கள், விஞ் ஞானிகள் முதல் கேஷவல் லேபர் வரை, பல்லாயிரக்கணக் கானவர்கள் வேலை பார்க்கும் அந்த நிறுவனத்திற்கு நாடு நகரங்களிலெல்லாம் கிளைகள். சென்னைக் கிளையில், பப்ளிஸிட்டி செக்ஷனின் மானேஜர் சுந்தரம் பலே கெட்டிக் காரர். அடிக்கடி பத்திரிகையாளர்களை வரவழைத்து, தம் கம்பெனிகளின் சாதனைகளை விளக்குவார். நிருபர்களை பாரதம் முழுவதும் உள்ள கிளைகளுக்குக் கூட்டிச் சென் றிருக்கிறார். குறைந்தது வாரத்திற்கு ஒரு தடவையாவது, அந்த கம்பெனியின் பெயர் தமிழகப் பத்திரிகைகளில் நல்ல விதமாக அடிபடுகிறது என்றால், அதற்கு நாற்பத்தைந்து வயது சுந்தரம்தான் காரணம். ஒரு வாரத்திற்கு முன்பு, அவர் கம்பெனியின் சாதனைப் பட்டியல் வெளியிடுவதற்காகத் தலைமையலுவலகத் திற்கு புள்ளி விவரங்களைக் கேட்டு எழுதியிருந்தார். அங்கேயிருந்து டெலெக்ஸில் புள்ளி விவரங்கள் குவிந்தன. இவற்றிற்குக் கண், காது, மூக்கு வைப்பதோடு மேக்கப் செய்ய வேண்டி யதும் அவர் வேலை. பப்ளிஸிட்டி எக்ஸிகியூட்டியாக வேலை பார்க்கும் லீலா மூன்று மாத விடுமுறையில் போயிருந்தாள். அவள் இடத்தில தாற்காலிகமாக நியமிக்கப்பட்ட மோகினியை சுந்தரத்துக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. தலை வலிக்கிறது என்று அவர் தற்செயலாகச் சொல்வியிருப் பார். பத்து நிமிடத்தில் பியூன் வந்து, மோகினியம்மா ஆஸ்ப்ரோ வாங்கிட்டு வரச்சொன்னாங்க" என்று சொல்லி, பிளாஸ்கில் இருந்து காபியை ஊற்றி, மாத்திரையை நீட்டுவான். அப்பா ஒரே டயர்டாய் இருக்கு'ன்னு சொன்னால் போதும். மோகினி அவரை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பி வைப்பாள். அவர் மறுத்தால், அவர்