பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 16 சு. சமுத்திரம் அப்படியா சொன்னான்! பேஸ்டர்ட்! இப்ப என்ன பண்றேன் பார்!" இதுக்குத்தான் ஒங்ககிட்ட நான் எதுவுமே சொல்றது. கிடையாது. அவன்கிட்ட நேரடியாகக் கேட்டிங்கன்னா உங்க டிக்னிட்டி தான் ஸ்பாயிலாகும். அதனால சமயம் வரும்போது கவனிச்சிக்குங்க!” • சமயம் வராட்டாலும் நானே உருவாக்குறேன். நானா எருமத்தலயன்...இவன்தான். இவன் அப்பன்தான், இவன் அம்மாதான். இவனும் அந்த லீலாவும் அடிக்கிற கூத்து எனக்குத் தெரியாதுன்னு நினைக்கிறான். மாரல் டர்பிட்யூட் கீழ அவனை சார்ஜ் பண்ணலேன்னா நான் சுந்தரம் இல்ல...' சும்மா பேசாதிங்க ஸார் ஒங்களுக்கு இளகின மனசு, கையில காலுல விழுந்தான்னா...மாறிடுவிங்க!' நானா மாறுவேன்? நானா மாறுவேன்? இல்ல, இல்ல, அவனை மாத்திக்காட்டுவேன்! வேணுமுன்னா பாரு! அவனை அந்தமான்ல போடாட்டா...' வேண்டாம் ஸார்! பாவம், பிழைச்சிட்டுப் போறான்.' எரும மாடுன்னு சொன்னாலும் பரவாயில்ல. எருமத் தலையன்னு சொன்னா என்ன அர்த்தம்? அவன, அவன...”* பசும்மா பல்லக் கடிக்காதிங்க ஸார் ஏண்டா சொன்னோ முன்னு எனக்குக் கஷ்டமா இருக்கு ’’ இந்தப் பியூன் பயலுவளுக்கு எவ்வளவு காசு அழு திருக்கிகேன். பெஸ்டிவல் அட்வான்ஸ் அது இதுன்னு எவ்வளவு சாங்ஷன் கொடுத்திருக்கேன். ஒரு பயலும் அவனைத் தட்டிக் கேட்கலியா?" அவங்களா? எரும மாதிரி தலய ஆட்டி குரங்கு மாதிரி கையக் கால ஆட்டி ஒன்ஸ் மோர் கேக்குறாங்க."