பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 119 அதேயேன் கேக்குற கண்ணகின்னு நினைப்பு! இவ் வளவுக்கும், திறமையில ஒன் கால்தூசு பெறமாட்டா!' சும்மா இருங்க ஸார்! ஒருத்திய திட்டி இன்னோ ருத்திய புகழ்வது எனக்குப் பிடிக்காது. பிளிஸ் ஸ்டாப் திஸ் டாபிக்...' சுந்தரம் அவளையே வியப்போடு பார்த்துக்கொண்டிருந் தார். இந்த சின்ன வயதிலேயே எவ்வளவு பரந்த மனப் பான்மை. எவ்வளவு விசுவாசம். உத்தியோகத்திலேயும் பிரின்ஸிபில்ஸ் பாக்குறான்னா, இவ மனுஷப் பிறவியில்ல... மனுஷப் பிறவியில்ல. தன்னிடம் அக்கறை காட்டிய மோகினிக்கு, தானும் அக்கறை காட்ட வேண்டும் என்று சுந்தரம் துடித்தார். கரிலாக்ஸ் செய்பவர்போல், சுழல் நாற்காலியில் சாய்ந்து கொண்டே கேட்டார். கடைசியில... ஒன் ஹஸ்பண்ட் அப்பாமேலே கேஸ்ே போட்டுட்டானே?’’ மோகினி பதில் சொல்வதற்குப் பதிலாக மெளனமாகத் தலைகுனிந்தாள். பிறகு புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டாள். சுந்தரம் திடுக்கிட்டார். அவர் இப்படி எதிர்பார்க்கவில்லை. அவர் என்னம்மா...' என்று பதறியபோது லேசாக அழுதாள். அடடே! நான் என்னமோ சொல்விட்டேன். நீ எதுக்கும்மா அழவுறl' மோகினி அவருக்குப் பதிலளிக்கவில்லை. முதலில் மெளனமாகத் தலைகுனித்தாள். பிறகு கண்ணிர் விட்டாள். அதைப் புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டாள். அவர் என்னம்மா...இது" என்று பதறியபோது லேசாக