பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 12:9 தாற்காலி. அதன் ஜோடியான மேஜை டிராயரில், இன்னும் இவள் வைத்துவிட்டுப்போன காகிதக்கட்டுகள், சங்கரைப் பார்த்து அவள் வரைந்த படங்கள், அவற்றிற்கு அவன் கொடுத்த காமென்ட்கள் உள்ளன. சங்கர் ஒரு திங்கர் ஹோட்டலில்’ என்று எழுதி, அவனைச் சாப்பாட்டு ராம னாகச் சித்தரித்து, அவள் வரைந்த ஒவியமும் உள்ளே இருக்கிறது. நீ லீலா...நான் விநோதன், இரண்டு வார்த்தை கள் ஒன்றாயின. இன்னுமா நாம் இரண்டாய் இருப்பது" என்று அவன் எழுதிய "புதுக்கவிதையும் அந்த டிராயருக்குள் உள்ளது. வீலா நாசுக்காகக் கேட்டுப்பார்த்தாள். இந்த நாற்காலி தான் எனக்கு ராசியான நாற்காலி. மூணு வருஷமா இதில் தான் இருந்தேன். அதுல உட்காராட்டா வேலயே ஓடாது." என்று மோகினியிடம் சொல்லுவாள். அவள், கண்டுக்க வில்லை என்பது மட்டுமில்லை, அந்த நாற்காலியில் தான் உட்கார வேண்டும் என்பதைவிட, லீலாவை அதில் உட்கார வைக்கக்கூடாது என்பதற்காகவே காலையில் முன்னதாக வந்துவிடுவாள். ஆனால் பஸ்ஸில் இடிபட்டு ஏறும் லீலாவால் பப்ளிவிட்டி மானேஜரின் காரில் வரும் மோகினியை முந்த முடியவில்லை. கண்ணுக்குப் பிடித்த சங்கரிடம் சொன்னாள். அவனோ இவள் கருத்துக்குப் பிடிக்காதபடி, கேவலம்...நாற்காலில் என்ன வந்தது. இ த ப் போ ய் பெரிசா எடுத்தா, என்னர்த்தம்?' என்றான். இருவரும் அருகருகே உட்கார்ந்து ஒருவர் கையை ஒருவர் கிள்ளிக்கொண்டும், ஒருவர் பிரசி னையை இன்னொருவர் மற்ற ஒருவருக்கும் தெரியாமல் கேட்டுக்கொண்டும் இன்பமாகக் கழித்த நாட்களை அவன் மறந்துவிட்டதுபோல் தோன்றியது. அந்த இன்பமயம் தொடர்வதற்குக் காரணமான நாற்காலி பறிபோனதில், அவனையே பறி கொடுத்தது மாதிரி அவள் தனக்குள்ளே ச.-9