பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 30 சு. சமுத்திரம் புலம்பிக்கொண்டாள். நாற்காலியைப் பிடித்தவள். பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்திருப்பவனையும் பிடித்துவிடு வாளோ என்றுகூட பயந்தாள். அதற்கு ஏற்றாற்போல், மோகினியும் சங்கரிடம் சிரித்துச் சிரித்துப் பேசுவதையும், சில சமயம் போங்க ஸார்' என்று அவனை இடிக்கப் போவதுமாதிரி, கையைத் தூக்கிச் செல்லமாக சிணுக்கு வதையும், லீலா சீரியஸாக எடுத்துக்கொண்டாள். அதே சமயம், கடற்கரையில் தன் தோள்களை லேசாகப் பற்றிக் கொண்டு சாய்ந்திருக்கும், அவனிடம், "என்னைக் கைவிட மாட்டீர்களே?' என்று அவள் அழாக்குறையாகக் கேட்கும் போது, அவன், ஒனக்கு என்ன பைத்தியமா?’ என்று சொல்லி, அவள் கையைப் பிடித்து அழுத்துவதையும் நினைத்துக்கொண்டாள். இது போதாதென்று இன்னொன்று. அந்தக் கம்பெனி ஊழியர்களுக்காக ஒரு "ஹவுஸ்ஜர்னல்" (சஞ்சிகை) நடத்தியது. மாத வெளியீடான அதில், கம்பெனி ஊழியர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகள் பற்றிய போட்டோக் களும், ஊழியர்களின் கவிதை, கட்டுரைகளும், அவர் களுக்குக் கம்பெனி செய்திருக்கும் நன்மைகளும் பிரசுர மாகும். கம்பெனியைப்பற்றி பிரமுகர்கள் தெரிவித் திருக்கும் கருத்துக்கள், சின்ன எழுத்திலும், சினிமா நடிகர் நடிகைகள் சொல்வது போல்ட் டைப் பிலும் வெளியாகும். இதற்கு பப்ளிஸிட்டி மானேஜர் சுந்தரம்தான் எடிட்டர்' என்றா லும், பத்திரிகை முழுக்க முழுக்க லீலாவே கவனித்து வந்தாள். இப்போது, மோகினியிடம் அது ஒப்படைக்கப் பட்டிருந்தது. ஜர்னலிஸத்தில் டிப்ளமா பெற்ற தன்னிடம் மானேஜர் மீண்டும் அதை ஒப்படைப்பார் எனறு நினைத்த லீலா, ஏமாந்தாள். அவள் வேலையில் சேர்ந்தபோது துவக்கப்பட்ட பத்திரிகை அது. அவளைப் பொறுத்த அாவில் சங்கருக்கு அடுத்தபடியாக அவள் நேசிக்கும் குழந்தை அது: