பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் சட்டையையும், ஜாக்கெட்டையும் மாற்றிக்கனுமா... அதையும் சொல்லிடு.” பானு வாய்விட்டு சிரித்து, மனம் விட்டுப் பூரித்தாள். அவனோ அனிச்சையாக ஜோக்கடித்தவன்போல், அவள் சிரிப்பில் தன் சிரிப்பை சிந்தவிடாமல், சீரியசாக சொன்னான்: ப்ளீஸ்... நான் சொல்றதைக் கேளு பானு 1 எனக்கு என்னமோ இன்னைக்கு மனசே சரியில்ல. இன்னொரு நாளைக்கு...”* இன்றைக்கு முடிந்தாகணும்; இன்னொரு நாளைக்கு என்றால், இனிமேல் அது கல்யாணமாகத்தான் இருக் கணும். எழுந்திருங்க, போயும் போயும் இன்னைக்குப் பார்த்து குட்டாம்பட்டி வேட்டியைக் கட்டிட்டு வந்திருக் கிங்க பாருங்க . அசல் சந்நியாசி மாதிரி இருக்குது. சரி புறப்படுங்க. '

  • வேண்டாம் பானு!’’

என்னங்க நீங்க? ஆனானப்பட்ட அப்பாவே சம்மதிச் சுட்டார். ஆறு மாதமாய் யோசிக்க டயம் கேட்டவரு. சரிம்மா, பையனைக் கூட்டிவாம்மா. பார்த்துட்டு முடிவு சொல்றே"ன்னு சொல்லிட்டார். நீங்க என் திட்டத்துக்கே முடிவு கட்டுறீங்களே. ’’ ச எனக்குக் கூச்சமா இருக்குது."

இது எனக்கு வரவேண்டியது.'

வெட்கம் வேற, கூச்சம் வேற, நல்லது நடக்கும்போது பெண்களுக்கு வெட்கம் வரும். இல்லன்னா அவள் பெண் னில்ல! நல்லது நடக்கும்போது ஆணுக்குக் கூச்சம் வரணும். இல்லன்னா அவன் ஆணில்ல." சுேவாமிகளே ! உங்க தத்துவத்தை, போய்கிட்டே பேச லாமா? எழுந்திருங்க.