பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 133 களா. நாளைக்கி ஈவினிங்கல வாங்க. ஏழு கான்ஸ்டபி ளாவது வேணும்! ஆல் ரைட், காலையில வந்துடச் சொல்லுங்க. ' நிரந்தரமாகாத ஒரு சாதாரண வேலையில் இருக்கும் போதே மோகினி இவ்வளவு திமிராகவும் அகங்காரமாகவும் இருப்பது எல்லோருக்குமே ஆச்சரியம் தந்தது. ஆனால் மோகினிக்குத் தெரியும், தன் அழகையும் சாமர்த்தியத் தையும் போட்டு, எந்தெந்த மேலதிகாரியை எப்படியெப்படி காக்கா பிடிக்கலாம் என்று. லீலாதான் அவளுக்கு முதல் நம்பர் எதிரியாகத் தோன் றினாள். அவளையும் அவள் காதலன் சங்கரையும் பிரித்து விட வேண்டும். லீலாவை நிரந்தரமாக விரட்டிவிட வேண்டும். இந்த நோக்கத்துடன்தான் மோகினி அட்டகாசம் செய்துகொண்டிருந்தாள். ஆனால் ஆபீசில்தான் இவ்வள வும். குடும்பத்தில் நிலைமை ரொம்ப மோசம். அவ்வளவு பெரிய அடையாறு வீடு ஒரு வெள்ளை யானையாகத் தோன்றவே அதை வாடகைக்கு விட்டுவிட்டுச் சின்ன வீட்டுக்குக் குடி போனாள். அப்படியும் செலவுகளைச் சமாளிக்க முடியவில்லை. உத்தியோகம் நிரந்தரமானால்... இதற்காகவே தான் அவள் கல்சுரல் அகாடமி என்று ஒன்றை ஆரம்பித்திருந்தாள் பல பெரிய மனிதர்கள் வந்து சந்திப்பதற்கு அது ரொம்ப வசதியான இடமாக இருந்தது. அந்தச் சங்கத்தில் அந்த விழா இந்த விழா என்று சாவணிர் வெளியிடுவாள். ஆபீஸ் பெயரை உபயோகப் படுத்திக்கொண்டு விளம்பரங்கள் வசூலிப்பாள். ஒசியில் பல காரியங்கள் நடக்கும். - எதற்கும் துணிந்த ஏகாம்பரமேகூடக் கொஞ்சம் திகில் பட்டார். "ஏம்மா ஏற்கெனவே நமக்குக் கஷ்டம். இதெல் லாம் வேறே ஏன்?' என்றார்.