பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 38 சு. சமுத்திரம் மோகினி எழுந்தாள். அவன் அந்த வீட்டில் இருந்தால் தன் குழந்தை நிச்சயம் அபார்ஷனாகிவிடும் என்பதை முழுமையாக நம்பி, பெண் புலியாய்ச் சீறினாள். இனிமேல் இந்த வீட்ல ஒரு நொடிகூட இருக்க முடியாது. ஒங்கள் உதவியில்லாமலே என்னால பிள்ளையை வளர்க்க முடியும்! வளர்த்துக் காட்டுறேனா இல்லியான்னு பாருங்க. எப்ப நீங்க என்னை அடிக்கிற அளவுக்கு வந்துட்டிங்களோ அப்பவே ஒங்கள என் மன சில டைவர்ஸ் பண்ணிட்டேன்... சுயமரியாதை உள்ளவராய் இருந்தால் நீங்க போகலாம். செலவுக்கு வேணுமுன்னாலும் பணந்: தாரேன்!" சீனிவாசன் அவளையே உற்று நோக்கினான். அடிக்கப் போன கைகளை அடக்கிக்கொண்டான். மடமடவென்று அறைக்குள் போய், தன்னுடைய துணிமணிகளை ஒரு லெதர் பேக்கில் புகுத்திக்கொண்டு புறப்பட்டான். போய் விட்டான். அன்றிரவு மோகினி தூங்கவில்லை. தலையணை உறையை மாற்ற வேண்டிய அளவுக்கு அவள் அழுது தீர்த்தாள். வழக்கமாக வயிற்றில் புரண்டு உதைக்கும்’ பிள்ளை, இப்போது நெளியாமல் இருப்பதை உணர்ந்து, இவள் தூக்கமில்லாமல் நெளிந்தாள். அந்தப் பாவி கொடுத்த அடியில் அபார்ஷன் ஆனாலும் ஆயிடுமோ... வாரங்கள் மாதங்களாக மாறிக் கொண்டிருந்தன. நிறைமாதக் கர்ப்பிணியான மோகினியால், வேலைக்குப் போக முடியவில்லை. சாப்பாட்டுக்கே கஷ்டமாக இருந்தது. அப்பாக்காரருக்கு ஜாதகம் பார்க்கத் தெரியும். அவருக்கு சுக்கிரயோகம் இருந்ததோ இல்லையோ! அப்படி ஆயிட்டா யாருக்காக வாழனும்...