பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 1 4 3 டோண்ட் ஒர்ரி மோகினி. குழந்தைச்கு சரியாயிடும்! அப்புறம் ஒரு விஷயம்! நாளைக்கு அந்த லீலா சனியன் லீவுல போவுது. உனக்குத் தற்காலிகமாய் உத்தியோக உயர்வு தருகிறேன்.' தேங்க் யு ஸார் என்னால ஓங்களுக்குச் சிரமம். என்ன மோகினி நீ, நமக்குள்ள எதுக்கு பார்மாவிட்டி... நீ என்னை மூணாவது மனுஷன் மாதிரி பேசுவதுதான் பிடிக்கல. இன்னொரு விஷயம். அதிர்ச்சி அடையாதே! உன் ஹஸ்பெண்டை பம்பாய்ல பாத்தேன். சாராய பாட்டி லோட... கிட்டத்தட்ட பொறுக்கியாயிட்டான். என்னை எப்படியோ பாத்துட்டு டேய்! நீதான என் ஒய்ப வச்சிக் கிட்டு இருக்கேன்’னு கேட்டான். நான் எப்படியோ சமாளிச் சிட்டு தப்பினேன். பிக்பாக்கட் வேற அடிக்கிறானாம். நினைச்சுப் பார்க்கவே கஷ்டமாய் இருக்கு. மோகினியின் முகம்-முன்பு கல்போல் அடிக்கடி மாறும் அந்த அழகான முகம், இப்போது இரும்பு மாதிரி கொல்லன் உலையில் உருக்கப்பட்டு கெட்டியான இரும்பு மாதிரி இறுகியது. வீட்டில் அவளை விட்டுவிட்டு விடைபெறப் போன சுந்தரம், அவள் தோளை லேசாகத் தட்டி. பின்பு பலமாக அழுத்தியபோது, அவள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஏன் எதிர்ப்பு காட்ட வேண்டும்? மகள் வாழ்வதற்காக நாம அழிஞ்சாலும் பரவாயில்ல; இனி மேல் எப்படி வேணுமுன்னாலும் வாழ்வேன். நான் பழைய காதல் மோகினியல்ல. மகளை வாழவைக்கப் போகிற கர்மயோக மோகினி. அதுக்காக எந்த லெவலுக்கும் போகத் தயார். எந்த பாதையிலும் நடக்கத் தயார். அந்த பாதையில குறுக்கிடும் எவரையும் அழிககத் தயார். பிறர் அழிவுலதான் நம் ஆக்கம் இருக்குன்னா அதுக்குத் தயார்... அதுக்காக... எதுக்கும் தயார்.