பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 翼45 கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா... ஒகே... இனிமே நியாயத்தை மோகினி கவனிச்சுக்குவாள்... ஐ ஸ்ே யூ கெட்டவுட்...' ஊமை கண்ட கனவு போல, மாப்பிள்ளைப் பையனைப் பற்றி அபிப்பிராயம் இருந்தாலும் அதைச் சொல்லமுடியாத ஆர்த்தடாக்ஸ் குடும்பத்தின் பெண்ணைப்போல, ஆபீஸர் ஒரு மடையன் என்று ஆதாரங்களோடு நிரூபிக்க முடியுமென் றாலும் அதை வெளியே சொல்ல முடியாத பியூனைப்போல, லீலா வெளியே வந்தாள். ஜி. எம். பெர்ஸிகியூஷன் காம்ப் ளெக்ஸி'ல் தவிக்கும் மனிதர். அவள் என்ன சமாதானம் சொன்னாலும் எடுபடாது. அதோடு தன்னுடைய செக்ஷனில் நடந்த தில்லுமுல்லுகளைச் சொல்லி, பாலைக் காட்டிக்கொடுக்க விரும்பாத செக்ஷனில் விசுவாசி யாக இருக்க அவள் விரும்பினாள். அவள் போனதும் ஜெனரல் மானேஜர், ஸ்டெனோவைக் கப்பிட்டு, மோகினிக்கு நியாயம் வழங்கி, ஒரு நோட் டிக்டேட் செய்தார். ஆர்டர் வந்ததும், மோகினி டெலி போனில் குதித்தாள். என் இஷ்யூவை ஜி. எம்.மே பாராட் டிட்டார்' என்று குடும்ப நண்பர்'களுக்கு டெலிபோன் செய்தாள். பப்ளிஸிட்டி சுந்தரத்திற்கு கூல்டிரிங்க் வாங்கிக் கொடுத்துவிட்டு, ' என் இஷ்யூவுக்கு நீங்கதான் சார் காரணம்' என்று கைகொடுத்தாள். சங்கருக்குக் கலர். (அதை அவன் லீலாவுக்குத் தெரியாமல் குடித்தான்.) பியூன் இவ்வளவும் செய்துவிட்டு லீலாவின் மேஜை • عها تت قُ قلعته முன்னால் ஒரு சாக்லெட்டை அதன்மேல் சுற்றிய ஜிகினா தாள் கிழியும்படி வன்முறையைப் பயன்படுத்தி வைத்தாள். இவள் வருவதற்கு முன்னதாகவே. ஜி. எம். பப்ளிவிட்டி மானேஜரை வரவழைத்து, பழைய விரோதங்களுக்கு இதை சாக்காக வைத்து அவரை வசைபாடிய ோது சுந்தரம், ச.-10