பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 147 டெப்திரி ராமன் இப்படிச் சொன்னதில் தப்பில்ல்ை தான். ஆனால் இந்தத் தப்புக்குச் சம்பந்தமில்லாத இன் னொரு தப்பு செய்திருந்தான். அதாவது நியாயத் தின் பழைய பிரதிகளைப் பழைய கடையில் விற்கும்போது கையுங் களவுமாகப் பிடிபட்டு பப்ளிளிட்டி சுந்தரத்திடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்திருந்தான். இந்தக் கடிதத்தை வைத்துக்கொண்டு, அவர் அவனை லாண்டிரி துணியை வாங்கிக்கொண்டு வரச்சொல்லுவார். ரேஷன் கடைக்குப் போகச் சொல்லுவார். ஒருநாள் மாவு கூட ஆட்டச் சொன் னாராம். மோகினி, ராமன் பொறுக்கித்தனமாய்” பேசியதை சுந்தரத்திடம் சொல்ல, அவர் பழைய திருட்டை, மன்னிப்புக் கடிதத்தை ஆதாரமாகக் காட்டி, நோட்' போட, ராமன் அயோத்திக்கு அப்பால் வனவாசியாக அனுப்பப்பட்டான். மூன்றே மூன்று நாளில் முடிந்துவிட்ட விவகாரம் அது. போன வருஷம் நடந்த திருட்டை, இந்த வருஷம் கிளப்பினால் அதற்கு என்ன அர்த்தம் என்று லேசாகச் சந்தேகப்பட்ட நிர்வாக அதிகாரியிடம் போய், மோகினி கொஞ்சம்தான் குழைந்தாள். அவர் காமென்ட்ஸ்’ எழுதப்போனதை நிறுத்திக்கொண்டார். அவருக்கு மேலிருந்த நிர்வாக யந்திர டிரைவர்களுக்கு இந்தச் சந்தேகம் வரவேயில்லை. லீலா தன்னைச்சுற்றி ஒரு வியூகம் வகுக்கப்படுவதைப் புரிந்துகொண்டாள். மோகினியைத் தேடிப் பல பெரிய அதிகாரிகள் வருவதும், அவள் கம்பெனியின் 'இரண்டாந்தர' அதிகாரிகள் அறையில் போய் அரட்டை அடிப்பதும் லீலா வுக்கு ஒரு சைகலாஜிகல் ஃபோபியாவை ஏற்படுத்திவிட்டன. அலுவலகத்தில் படுகோழையாக மாறிப்போன சங்கரிடம், மாலையில் கடற்கரையில் ஒப்பாரி வைக்காதர்ேகுறையாக அழுது தீர்த்தாள். அவன் தன்னிடமிருந்து பறிக்கப்பட்டு விடுவானோ என்று பயந்துபோய், கல்யாணத்தை எப்போ வச்சிக்கலாம்' என்று கேட்டாள். அவனுக்கும் இப்போது இரவில் ஒரு துணை தேவை என்ற அளவுக்கு பயம் பிடித்து