பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 48 சு. சமுத்திரம் விட்டது. பொருட்படுத்தக்கூடிய அளவிற்கு உறவுகாரர்கள் இல்லாதவன். அவனுக்கு அவனே மாப்பிள்ளையின் அப்பா, அம்மா, தோழன்...எல்லாம். ஆக, ஆவணி மாதம் மூன்றாந் தேதி திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று ஆடிப் பெருக்கன்று தீர்மானித்தார்கள். அந்த மகிழ்ச்சியில் திளைத்த லீலா, பெரியப்பா மகள் கல்யாணத்திற்காகப் பதினைந்து நாள் லீவில் ஊருக்குப் போய்விட்டாள். பப்ளிளிட்டி மானேஜர் முகத்தில் ஈயாடாமல் உட் கார்ந்திருந்தார். மோகினியும் எதிரே ஆடாமல் உட்கார்ந் திருந்தாள். டைப்படித்த ஒரு காகிதத்தை ஒருவர் மாறி ஒருவர் படித்துக்கொண்டிருக்கும்போது சங்கர் புஷ் டோ ரைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்து பிரிண்டர் ஸ்டிரைக் ஆர்டர் கேட்கிறார்' என்று சொன்னபோது, பப்ளிளிட்டி சுந்தரம் மிஸ்டர் சங்கர்... ஹேவ் ஸம்மானர்ஸ். திறந்த விட்டுக்குள்ள ஏதோ ஒண்ணு வாரது மாதிரி வந்தா என்ன அர்த்தம்' என்று சொல்லி, கிட்டத்தட்ட அப்படி வந்த அது மாதிரி அவரே வள்ளென்று குரைத்தார். அங்கேயே தன் தலையில் ஓங்கி அடித்துக்கொள்ளலாமா என்று நினைத்த சங்கர், பிறகு அது இன்டிஸிபிளினாய் எடுத்துக் கொள்ளப்படும் என்று நினைத்தவனாய் வெளியே வந்து தலையில் லேசாக அடித்துக்கொண்டான். உள்ளே இருந்த மோகினி, என்ன ஸார் பண்ணலாம்; ” என்றாள். அதுதான் எனக்குப் புரியல. அடிஷனல் போஸ்ட் கொடுக்கமாட்டோமுன்னு வந்தபிறகு என்ன பண்ண முடியும்?' என்றார் சுந்தரம். அப்படின்னா இவ்வளவு நாளும் வின் வியரா ஒர்க் பண்ணி என்ன லார் பிரயோஜனம்? வரவர நாட்ல உழைப் புக்கு மதிப்பில்லாம போச்சு தொடாதிங்க வார் :