பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 夏垒9 நான் சொல்றதைக் கேளு மோகினி. இன்னும் உன் சர்வீஸ் முடிய ஒரு பதினைஞ்சு நாளு இருக்கு அதுக்குள்ள ஏதாவது பண்ண முடியுமான்னு பாக்கலாம்.' விடுங்க ஸார் கையை. எனக்கு அழுகையா வருது." சுந்தரம், பற்றிய கையை விட்டார். மோகினி அழுது கொண்டே பேசினாள். கட்டின புருஷனும் என்னைக் கையை விட்டுட்டான். நீங்களும் கையை விட்டுட்டிங்க. அனாதையா நிக்கிறேன்... இன்னும் ரெண்டு வார த் து ல... இன்னும் ரெண்டு வாரத்துல... " சுந்தரம் அவள் கண்களைத் துடைத்தார். தலை முடியைக் கோதிவிட்டார். அவளைக் கைவிடவில்லை. பிடித்துக்கொண்டார். ஆல் ரைட்... நான்... நானே டெல்லிக்குப் போய் ஒரு போஸ்ட் வாங்கிட்டு வந்துடுறேன். ஒண்ணும் முடியாம போனா அஸிஸ்டென்ட் பப்ளிவிட்டி ஆபீஸர் போஸ்ட் * சரண்டர்' பண்ணிட்டு பப்ளிஸிட்டி எக்ஸிகியூட்டிவ் போஸ்ட் வாங்கிடுறேன். பெரிய போஸ்ட்டை சரண்டர் பண்ணுன்னt சரி... சின்ன போஸ்ட் வாங்கிடலாம். இந்தா ஒனக்கு போன். ' - மோகினி சிரித்துக்கொண்டே டெலிபோனில் பேசி னாள். மறுமுனையில் பேசியவர் புதியவர் என்றாலும், பெரிய பதவி வகிப்பவர். ஆகையால் அவரிடம் பழசு’ மாதிரி பேசினாள். சுந்தரம் ஆச்சரியப்படுவதுபோல் புருவங் களை உயர்த்தியபோது, டோனை' கொஞ்சம் மாற்றிக் கொண்டாள். டெலிபோனை வைத்த வேகத்திலேயே, வெளியே வந்தாள். அங்கே இருந்தால் அவர் டெலிபோன் உரையாடலைப்பற்றி ஆயிரம் கேள்விகள் கேட்பார் என்று தெரிந்து, வேகமாக வெளியே வந்தாள்.