பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 及5彦 அதுதான் கேட்டேன். இப்ப ஒங்களுக்கு சனி எட்டாம் இடத்துல இருக்கு... அஷ்டம சனி.' அப்படின்னா!' அஷ்டமத்துல சனி இருந்ததுணாலத்தான் பூரீராமனே பட்டத்தை இழந்தார். எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க கூடுமானவரை, ஒரு பெண்ணாலயே கூட ஒங்களுக்குக் கஷ்டம் வரலாம்!" "ஆமாம்... இந்த ஜோஸிய சமாச்சாரம் ஒங்களுக்கு எப்படித் தெரியும்?" "இந்த மெட்றாஸில நல்லா ஜோஸ்யம் தெரிஞ்சவங்கள விரல் விட்டு எண்ணினிங்கன்னா எங்கப்பா ஆள்காட்டி விரலு... ஜாதக தோஷத்துக்குக் கழிப்புகூட செய்வாரு.' ஐ வி... மோகினி, ஒங்கப்பப்வை நான் பாக்கணும். ஜாதகத்தைக் கொண்டு வரணும். எப்ப வரலாம்.'

  • அப்பா கொஞ்சம் பிஸி... பெங்களுர் கல்கத்தான்னு பறந்துகிட்டே இருப்பாரு. எதுக்கும் இன்னிக்கு நைட்ல வந்து பாருங்க... அடையார்ல என்ஜினியர் பங்களா எதுன்னா குழந்தை கூட சொல்லும். '

தேங்க் யு. கண்டிப்பா வந்துடுறேன்.'" * சரி காபி குடிங்க! ஆறிடப்போவுது. ’’ ஏற்கனவே காபி குடித்துவிட்ட மோகினி, அவன் காபி குடிக்கக் குனிந்தபோது பப்ளிவிட்டி மானேஜரிடம் சிரித்துப் பேச சப்ஜெக்ட் கிடைத்ததில் மகிழ்ந்துபோனாள். அவனோ, இன்னிக்கே அப்பாவை என் ஜாதகத்தை பாத்துச் சொல்லச் சொல்லுங்க' என்றான், கோப்பையின் விளிம்பைப் பற்றிய உதடுகளை விலக்கிக்கொண்டே.