பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 56 சு. சமுத்திரம் சங்கர் அவளை சமாதானப்படுத்தினான். "மிஸ் மோகினி, நீங்க இன்னும் குழந்தையாகவே இருக்கிங்களே. காதல், வாழ்க்கையிலே ஒரு பகுதி. வாழ்க்கை, காதல்லே ஒரு பகுதியில்லை. வீலாவைக் கட்டி காம அவள் காதலை நினைச்சி வாழ்ற இன்பம் அவளைக் கட்டி அப்புறம் கலாட்டாவை நினைச்சு வாழ்ற துன்பத்தை விட சுகமானது." சபாத்தியாளாப்பா? இவரு பேசினா நாம பதிலே பேச முடியாது. நான் சொன்னது ஞாபகமிருக்கா, ரொம்ப இன்டலிஜென்டா பேசுவார்!" ஏகாம்பரம் மகள் சொல்வதை ஆமோதிப்பதுபோல் தலையை ஆட்டிவிட்டு, சங்கர்-லீலா அருமையான பெயர் பொருத்தம், எதுக்கும் நாளைக்கு சாயங்காலம் வாங்க. நல்லா பாத்து சொல்லிடுறேன்!' என்னப்பா ஒரேடியாய் பேசிக்கிட்டு...மிஸ்டர் சங்கர், இன்னைக்கி நீங்க நம்ம விட்லதான் சாப்பிடணும்.' வேண்டாங்க..”* என்ன ஸார் நீங்க! பேபி எவ்ளவு ஆசையோட கூப்புடுது. முகத்துல அறையுறதுமாதிரி வேண்டாமுன்னா என்னர்த்தம்: பேபி, நீ எதுக்கும்மா கலங்குற?" விடுங்கப்பா அவரை நம்ம வீட்ல அவரு சாப்பிட்டா கெளரவம் போயிடும்.' மோகினி கோபப்பட்டுக்கொண்டு உள்ளே போய் விட்டாள். அவளைச் சமாதானப்படுத்த அப்பாக்காரர் போனார். அவர்கள் இருவரையும், சாப்பிட்டு சமாதானப் படுத்த, சங்கரும் பின்னாலேயே போனான்.