பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 சு. சமுத்திரம் நோன் நாலையும் யோசிச்சிட்டுதான் சொல்றேன். மனுஷன் உத்தியோகத்துல பொய் சொல்லலாம். வியாபா ரத்தில் பொய் சொல்லலாம். ஆனால் ஜாதகத்தில பொய் கொல்லப்படாது! சொன்னா வாயில கறையான் அரிக்கும். எனக்கும் இவரு மனசுல நினைச்சவளைப் பண்ணிக்கணு முன்னுதான் ஆசை. அதுக்காக பொய் சொல்லி இவரு அவளைப் பண்ணி அப்புறம் துள்ளத்துடிக்க செத்துட்டா, அந்த பழிபாவம் விடுமா? இல்ல விடுமான்னேன். இல்ல, நீதான் என்னை இந்த வீட்ல இருக்க விடுவியா?’’ சங்கரால் எதுவுமே பேச முடியவில்லை. பித்துப் பிடித்தவன்போல், அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். தேனிலவுக்குப் புறப்படும் வேளையில், மணமகள் விபத்துக் காளாகும் கோரக்காட்சியைப் பார்க்கும் மணமகன்போல் துடித்துப் போனான். நினைத்துப் பார்க்கவே முடியாதது. நிதர்சனமாகிவிடுவதுபோல் தோன்றியதால் அவன் அத்த நிதர்சன நிலையிலிருந்து மாறுபட்டவன்பே ல், ஆகாயத் தில் தலைகீழாக மிதந்துகொண்டிருப்பவன்போல் இருந்தான். திறந்திருந்த கண்களை இருள் மூடுவதுபோல் தோன்றியது. அவன் முன்னால் இருந்த இருவரும் நிழல்கள்போலவும், சில சமயம் இரும்பு யந்திரம் போலவும் தோன்றினர். மோகினிக்கும் அழுகை வந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டாள். பாவம் லீலா... பாவம் லீலா...' என்று வாய் முணுமுணுத்தது. என்னப்பா, நீங்க சுத்த மோசம். மிஸ்டர் சங்கர், இவரு சொல்றது தப்பாக்கூட இருக்கலாம். எதுக்கும்... இன்னொருவர் கிட்ட காண்பிங்க. சும்மா கிடங்கப்பா, ஒங்க வாயில விழுந்த யாரு உருப்பட்டா? இப்படித்தான் கணேஷன் சுந்தரியைக் கட்டினா கேன்ஸர் வருமுன்னிங்க. அவன் அவளைக் கட்டி கடைசியில கேன்ஸர் கட்டியில் செத்துப்போனான். இனிமே யாரையும் நான் இங்கே கூட்டிக்கிட்டு வரப்போவதில்ல'