பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 சு. சமுத்திரம்

  • அய்யய்யோ, ஏம்மா அழுவுற1 நானிருக்கேன். அழாதேம்மா. என்ன விஷயம்: விஷயத்த சொல்லு. நானிருக்கேன், அழாதே."

வனிதா அமைதியாகப் பேசினாள். ஆனால் அழாமல் இருக்க முடியவில்லை. மோகினியும் அவசரப்படுத்தினாள். அழாதம்மா. விஷயத்த சொல்லு எனக்கும் கொஞ்சம் வெளில வேல இருக்கு." வார்த்தைகளுக்கு இடையே வரும் கால் புள்ளிகள் போல் அவள் பேசியபோது, அழவேண்டிய சந்தர்ப்பங்கள் பல வந்தன. "நீங்கதான் என்னைக் கரையேத்தணும். ராஜனோட அப்பா வில்லியம்ஸ் ஒங்களுக்கும் தெரிஞ்சவர் தானே, அவரு முதல்ல எங்க கல்யாணத்துக்குச் சம்மதிச்சாரு. வெளியூருக்கு கேம்ப்' போயிட்டு வரும்போதெல்லாம் எது வாங்கிக் கொண்டு வந்தாலும், ரெண்டு வாங்கிக் கொண்டு வருவார். ஒண்னு அவரோட மகளுக்கு, இன்னொன்று எனக்கு. நீ எனக்கு மகள்’னு சொல்லுவார். அப்படிச் சொன்னதன் அர்த்தம் இப்பதான் புரியுது. ராஜன் என்னைக் கட்டிக்கக்கூடாதாம். அவங்க ஜாதியில எந்தப் பொண்ண வேணுமுன்னாலும் அவர் கட்டிக்கலாமாம். ஆனால் என்னை...என்னை...' வனிதாவால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. விம்மல்கள் வெடிகளாக வந்தன. கீழே விழாமல் இருப்பதற் காக, நாற்காலி ஒன்றைப் பிடித்துக்கொண்டாள். மோகினியும், துடித்துப்டோனாள். அழாதேம்மா. அழாதேம்மா. எதுக்காக ராஜன் அப்பா இப்டி மனம் மாறிட்டார்? நம்ப முடியலியே?’’ என் கேரக்டர்ல அவருக்கு சந்தேகமாம். அதோட வேற ஜாதியாம். எந்தக் குடிகெடுப்பாளோ, அவர் கிட்ட இல்லாததும் பொல்லாததுமா சொல்லிட்டாள். நான்