பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲ 7 ፀ சு. சமுத்திரம் மோகினி புன்னகை செய்துகொண்டாள். தன் எதிரி களை எப்படியெல்லாம் ஒழித் திருக்கிறோம் என்பதை எண்ணி அவளுக்கே பெருமையாக இருந்தது. அஸிஸ்டெண்ட் பப்ளிளிட்டி மானேஜர் பதவி காலி யானபோது கம்பெனி ஒரு போர்டை அமைத்து, இன்டர்வியூ மூலம் திறமையான ஒருவரை நியமிக்கத் தீர்மானித்தது! அந்த விஷயம் சுந்தரம் மூலம் மோகினிக்குத் தெரிந்தது. அந்தச் சமயம் பார்த்து, மானேஜிங் டைரெக்டர் கிர்தா சிங், சென்னைக்கு டுர் வந்தார். அவர் வரப்போகிறார் என்று மோகினியின் எதிரிகளுக்கும் தெரிந்தது. அவர்கள் வாயில்லாப் பூச்சிகள்தானே தவிர, கையில்லாப் பூச்சிகள் அல்ல. அவர் டில்லியிலிருந்து புறப்படுவதற்கு முன்பாக மொட்டைப் பெட்டிஷன்கள் பறந்தன. மோகினி தன் கவர்ச்சியை மூலதனமாக வைத்துப் பலரைக் கைக்குள் போட்டிருக்கிறாள் என்று ஆதாரங்களோடும், ஆதாரப் படுத்த முடியாத கையெழுத்துக்களுடனும், குவிந்த மொட்டை மனுக்களைப் பார்த்த கிர்தாசிங் தன் மோவா யைத் தடவிவிட்டுக் கொண்டார். சபார்டினேட் பெண்களை யெல்லாம் காதலிகளாக நினைக்கிற டைப் அவர். சிரித்துக் கொண்டே வந்தார். அவர் வந்ததும் குட்மார்னிங்" போட்ட மோகினி, குட் நைட்" போடாமல் அவருடனேயே ஒரிரவைக் கழித்ததாகக் கேள்வி. பப்ளிஸிட்டி சுந்தரத்திடம் மதுரையில் தன் பெரியம்மா மகள் இறந்துவிட்டதாகச் சொல்லி மோகினி ஒரு வாரம் லீவு போட்டுப் போயிருந்தாள். அலுவலக விஷயமாக டில்லி போன சுந்தரம், கிர்தாசிங்கின் அறைக்குள் நுழைந்தபோது மோகினி அவர் எதிரே சிரித்துக்கொண்டே இருப்பதைக் கண்ணாரக் கண்டு, வயிறார எரிந்தார். கிர்தா சிங் * மிஸ்டர் சுந்தரம், கொஞ்சம் வெளில இருங்க' என்று சொன்னார். திரும்பிப் பார்த்த மோகினி திடுக்கிட்டாளே தவிர சுந்தரத்திற்கு வணக்கம் சொல்லவில்லை-அவர் வணக்கம் சொல்லியும்.