பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் நான் அதைத் தள்ளிவைக்கச் சொல்றனே தவிர, தடை போடச் சொல்லலியே!” ஒரு பிரச்சனைக்கு தீர்வு... அதை எதிர்நோக்குவதில் தான் இருக்குது. அதிலிருந்து ஒடுறதுலயோ... தள்ளிப் போறதுலயோ இல்லன்னு சொல்ற நீங்க, இப்போ தள்ளிப் போடுறது. ஒடுறதைவிட மோசமானது! நீங்க வீட்டுக்கு வரகை தள்ளி வைக்கிறது மூலம் என்னை தள்ளி வைக்கிற தாய் தான் அர்த்தம் பண்ண முடியும். நான் சொத்துக்கு ஆசைப்படுகிறதாய்...! சொத்து சொத்து-மண்ணாங்கட்டி சொத்து... இது உங்களோட சொத்தை விவாதம் சார்: இதே புடவையோடு ஒங்க பின்னால வாறேன்; கோயிலிற்குப் போவோமா, ரிஜிஸ்டர் ஆபீஸிற்கு போவோமா, இல்லன்னா...குட்டாம் பட்டியில் ஒங்க சித்திகிட்டே போவோமா! எனக்கு இப்பவே முடிவு தெரியனும் ஏன் யோசிக்கிறீங்க." 'நீ நினைக்கிற மாதிரி விஷயம் சிம்பிள் இல்ல பானு ' இப்படி நெனச்சுதான் பலர், சிம்பிள் விஷயத்தை, காம்ளிகேட் செய்துடுறாங்க. வீட்ல ஒங்களைக் கடித்தா தின்னப்போறாங்க? ஒங்ககிட்டே சில கேள்விகள் கேட்கப் போறாங்க. வீட்டுக்கு வார மாப்பிள்ளை, நல்ல பையன் தான்னு உறுதிபடுத்த நினைக்கிறாங்க. அதுக்கு, அவங்க ளுக்கு உரிமை உண்டு. அதை நிறைவேத்துற கடமை ஒங்களுக்கு. சரி. இன்னும் ஒங்க மனசு மாநல்லன்னா, நான் இங்கே நிற்கிறதுல அர்த்தமில்ல! அப்பா பங்சுவாலிட் டிக்கு மதிப்பு காடுக்கிறவர். நிச்சயித்த நேரம் போய் கால்மணி நேரம் ஆகுது. அப்புறம் ஒங்க இஷ்டம் சரி நான் போகட்டுமா!' அவள் கேள்விக்குப் பதிலை வாயால் சொல்ல முடியாதவன்போல் செல்வம் மெள்ள நகர்கிறான். அவள் கரங்கள் இரண்டையும் கூம்பாய் எடுத்து கண்களில் ஒற்றிக்