பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 177 இந்தக் கலாவுக்குப் பத்து வயதிருக்கும்போது, மோகினிக்கு அமெரிக்காவில் ஒரு வேலைக்கு வாய்ப்பு ஏற்பட்டது. பெற்ற மகளைப் பிரிந்திருக்க முடியாது என்ப தற்காக ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கக்கூடிய அந்த வேலையை மறுத்துவிட்டாள். கலாவுக்கு, பன்னிரண்டு வயதானபோது மம்மி நானும் பிரபா மாதிரி கார்ல போகணும்' என்று ஒரே ஒரு தடவை சொன்னதுக்காக, மோகினி பலதடவை ஜி.பி. எப். போட்டும் பலரிடம் கடன் வாங்கியும், இருக்கிற நகை நட்டுகளை விற்றும், அம்பாஸிடர் கார் ஒன்றை வாங்கினாள். பின்னால் மகள் நகை நட்டுகளுடன், கணவனைவிட ஒரு பிடி' அதிகமாக விளங்க வேண்டும் என்பதற்காக குருவி சேர்ப்பதுபோல் சேர்த்தும் சில கம்பெனிகளுடன் அண்டர்ஹேண்ட் டீலிங்ஸ் வைத்துக்கொண்டும் கிட்டத்தட்ட அறுபது சவரன் நகை களைச் செய்து வைத்திருக்கிறாள். மகளை எப்படியும் ஒரு ஐ.ஏ. எஸ். மாப்பிள்ளைக்குக் கட்டிவிட வேண்டும் என்பது மோகினியின் நெடுநாள் கனவு. "ஒன் அந்தஸ்துக்கு ஐ ஏ. எஸ். பையன்தான் மாப்பிள்ளையாய் வரணும்" என்று ஏகாம்பரம் எதேச்சையாக சொன்னதை சீரியஸாக எடுத்துக் கொண்டு, அந்த லட்சியத்திற்காகவே பலரிடமும் ரகசிய மான தலைக்குனிவுகளுக்கு" ஆளானவள். அதோடு பப்ளிவிட்டி சுந்தரம் ஜெனரல் மானேஜர் போன்ற பலரைத் தீர்த்துக் கட்டியதற்கு அடிப்படைக் காரணம் மகள் நன்றா யிருக்க வேண்டும் என்ற அவளது தாய்மை உணர்வே. ஆனால் கலா அம்மாவிடம் பேசுவதே இல்லை. உண்டு-இல்லை என்ற பதில்தான். அதுவும் தலையாட்டுமூலம். முன்பாவது பாட்டிமூலம் தூதனுப்புவாள். இப்போது பாட்டி செத்த துடன், அந்த தூதும் செத்துவிட்டது. மகள் கெட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக, மோகினி அவளிடம் நேரடியாகவே ஒனக்கு ஐ.ஏ.எஸ். மாப்பிள்ளை பார்த் ச.-12