பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 94. சு. சமுத்திரம் வீட்டிற்கு வந்த மோகினி, மகள் இன்னும் ஆபீசிலிருந்து வரவில்லையா என்பதுமாதிரி வீட்டை நோட்டம் விட்டாள். காணவில்லை. அலுவலகத்திற்கு டெலிபோன் செய்தாள். தூக்கிவாரிப் போட்டது. அலுவலகத்திற்கு ரகுமணியும் கலாவும் அன்று வர வில்லையாம். பதறிப்போனாள். மகளை இனிமேல் பார்க்க முடியாதோ என்று நினைத்தபோது, அவள் தலை சுழன்றது. போலீஸ் சூப்ரின்டெண்ட் வில்லியம்ஸிற்குப் போன் செய்தாள். அவர், கண்ட்ரோல் ரூம் வழியாக விசாரித்து, திருப்பதி பக்கம், ஒரு கார் போன வேகம் சந்தேகத்தை உண்டுபண்ணுவதாய்த் தகவல் வந்ததென்று கூறினார். பின்னர், அவர் சொன்ன ஆறுதல் வார்த்தைகள் அவளுக்குக் கேட்கவில்லை. கடவுளே, என் மகளை என்னிடம் கொடுத்துவிடு. ரகு மணியோடு கொடு. நானே முன்னால் நின்று வனிதாவுக்கு ராஜனைக் கட்டி வைக்கிறேன். கடவுளே, முருகா! ஈசுவரா! என் பெண்ணை என்கிட்ட கொடு. என்கிட்ட கொடு: என் ராசாத்தியை நான் பார்ப்பனா? என் கண் ணுக்குக் கண்ணை என்னால் பார்க்க முடியுமா? திடீரென்று டெலிபோன் மணி அடித்தது. மறுமுனையில் இருந்து டாக்டர் உஷா பேசினாள். கவலைப்படாதீங்க மோகினி, ஒங்க மகள், நான் சொன்னேனே கோனைக்கு, அங்கதான் போயிருக்காள். அதுவும் உங்களுக்காக. உங்க நனமைக்காக சாமியாரைப் பார்க்கப் போயிருக்காள் என்கிட்ட உங்ககிட்ட சொல்லச் சொன்னாள்...' மோகினியின் கண்களில், இன்ப நீரும், துன்ப நீரும் சேர்ந்து பொங்கின! மகளே அவளை நல்வழிப்படுத்த, தகப்பன்சாமியாக மாறி. அன்பிற்குள் தண்டனையை