பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 195 வைத்து, தண்டனைக்குள் அன்பை வைத்து... பெற்று வளர்த்துப் பேரிட்ட மகளை அப்போதே பார்க்கத் துடித் தாள். ஒருவேளை உஷா சொல்வதுமாதிரி இல்லாமல் உஷா விடமே பொய் சொல்லிவிட்டுக் கலா எங்கேயாவது கண்ணுக் கெட்டாத இடத்திற்குப் போயிருப்பாளோ என்றும் நினைத்துப் பதறினாள். பொழுது புலரும் முன்னாலேயே, காமாட்சியின் டிரைவ ரோடு அவள் புறப்பட்டாள். சென்னை-திருப்பதி சாலையில் புத்துரருக்கு அருகே சாலையிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்கு தெற்கே, ஒரு பள்ளத்தாக்கு சாலையை ஒட்டிவரும் ஆற்றைக் கடந்து ஒற்றையடிப் பாதை வழியாக ஒரு கிலோ மீட்டர் நடத்தால், கோனையின் ஞான வாசனையை துகரலாம். அங்குமிங்கும் மரங்கள் பந்தலிட அவற்றினின்று உதிர்ந்த பூக்கள் கம்பளிப் பூச்சிபோல் கண்ணைப் பறிக்கும். அவற்றில் கால் படக் கூடாது என்று நம்மை ஜாக்கிரதையாக நடக்க வைக்கும் ஒருவித மோனம்... நிசப்தமான அந்தச் சோலைவெளி பரவெளிபோல், ஆன்மாவை அடையாளங் காட்டும் அடைக்கல வெளிபோல் அங்கே இறைவன், ஏகனாவும், அநேகனாவும் இருக்கிறார் என்பதைக் காட்டும் ஞானவெளிபோல், நம்பினார் கெடுவ தில்லை என்பதைக் காட்டும் ஆட்கொள்ளும் வெளிபோல்" இறைவனின் அபிலாஷைகள் இங்கேதான் சிருஷ்டிக்கப்படு கின்றன என்பதுபோல விளங்கும் சிருஷ்டி வெளிபோல்’ இங்கே... வந்தால் எல்லா வினையும் போகும்’ என்பதைக் காட்டும் உபதேச வெளிபோல், கல்லாமலே ஞானம் கற்க லாம் என்று இயம்பும் ஆன்ம வெளிபோல், புராணத்தில் சொல்லப்படும் கைலாய வெளிபோல் காட்சியளித்தது. அந்தச் சோலைவெளி முடியும் மலையடிவாரத்தில், எப்போதும் வற்றாத நீர்வீழ்ச்சி. அதற்கு மேற்குப்பகுதியில்