பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷96 சு. சமுத்திரம் உள்ள சிறு குகையில், விபூதி குங்குமத்திற்கு பிரகாசம் கொடுப்பதுபோல் விளங்கும் விங்கம். அருவியின் சத்தம் பக்தர்களுக்கு ஓம்’ என்று சொல்வதுபோல் ஒலிக்கும். லிங்கக் குகைக்கு எதிர்த்தாற்போல் இருந்த மலைத் திட்டில் ஒரு சிறிய ஆசிரமம், ஆசிரமத்திற்கு முன்னால் பெரிய வெளி. சாமியாரின் வேண்டுகோளுக்கிணங்க, காட்டி லாகாவினரே அந்தக் கரடுமுரடான மலைப்பகுதியைச் சமப்படுத் தி இருந்தார்கள். அந்த வெளி முழுவதும் சாணத் தால் மெழுகப்பட்டிருந்தது. மற்றபடி எந்தவித ஆர்ப்பாட் டமோ ஆரவாரமோ இல்லாத ஆசிரமம் அது. வெளி திண்ணையில், மூலிகை மருந்துகளை அரைப்பதற்காக கல்லாலான கலுவம் இருந்தது. அன்று கிருத்திகை. ஆசிரமத்தில் பல பக்தர்கள் மொய்த்துக்கொண்டிருந் தார்கள். பக்கத்தில் ஹார்மோனியம் வாசித்துக்கொண்டு, வெள்ளாடை கட்டிய பெண் ; இருவருக்கும் நாற்பத்தைந்து வயதிருக்கும். சாமியாருடைய உடம்பு அடங்கியும், அடக்கப் பட்டும், ஒடுங்கியும், விளங்கியும், உடும்புபோல் இறுகியும் இருந்தது. புருவமத்தியில் திரிசூலம் போன்று ஒன்றோ டொன்று சங்கமமாகும் மூன்று கோடுகள்: த டி, நீளமாக இல்லை. வெள்ளை வேட்டிதான். காவியல்ல. சாமியார் • சித்தாசனத்தில் அமர்ந்திருந்தார். கோனைக்குக் காரிலேயே வருவதற்கு மலைப்பாதை ஒன்று உண்டு, தெய்வ பக்தரான வள்ளியப்பன் என்பவர், சித்துரர் கலெக்டராக இருக்கும்போது பெரிதுமக்களின் வேண்டுகோளின் பேரில் போடப்பட்ட சாலையாம், மோகினி அந்தப் பாதை வழியாகக் காரில் வந்தாள். டிரைவர் மேடான பகுதியில் காரை நிறுத்தினார். மோகினி இறங்கி வந்தாள். குறுக்கு வழியில் முன்னுக்கு வந்த அவள், இப்போதும் தனக்கு வந்த நோயைக் குறுக்கு வழியில் தீர்க்கலாம்