பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 197 என்றும், சஸ்பென்ஷனை ரத்து செய்யச் சாமியாரிடம் தாயத்து வாங்கலாம் என்றும் வந்திருந்தாள். அவள் நடந்து கொண்டிருந்தபோது, வடலூர் வள்ளலாரின் பாடலைச் சாமியார் சுதிநயத்துடன் பாடினார். அவர் மனைவி, சுதியில் அவர் குரலை அடக்காமல் அடக்கி வாசித்தாள். காச மேகங் கடும்பிணி சூலைமோ காதிய யாற்றந்து கண்கலங்கஞ் செய்யும் மோசமே நிசமென்று..." மோகினி ஆசிரமப் படிக்கட்டுகளில் ஏறியபோது, சாமியாரைப் பார்த்துத் திடுக்கிட்டாள், சந்தேகமில்லை. அவளுக்குப் பரிச்சயமான ஒவ்வொரு அங்கங்களையும் சாமி யாராக-சீனிவாசனாகப் பார்த்தாள். பக்கத்தில் யார்? லீலாவா! ஆம். இவளால் ஒட்டப்பட்ட லீலா தான். இன்று பலருக்குத் துன்பத்தையோட்டும் துணையாக இருக்கிறாள். சீனிவாசனுக்கும் துணை... அவர்களுக்கருகே அமர்ந்திருந்த கலாவையும், ரகுமணி யையும் பார்த்ததும் அவள் கண்களில் ஆனந்த நீர் சுரந்தது. சாமியாரின் குரல் கணிரென்று ஒலித்தது பிராணா யாமம் செய்த அவர் குரலொலி பிசிறில்லாமல், அருவியின் ஒலிபோல், பிரபஞ்சத்தைத் தட்டுவதுபோல், பஞ்சபூதங் களை ஒரு பூதமாக்குவதுபோல், முதியவனின் முதிர்ச்சி யுடன், குழந்தையின் நளினத்துடன் ஒலித்தது. அவர் பேசப் பேச, மோகினி தன் காதுகளில் படர்ந்துள்ள கறுப்புப் படை களை பிடித்துவிட்டுக் கொண்ட ள். "பாவத்திற்குப் பயப்படலாம். ஆனால் பாவிகளுக்குப் பயப்படலாகாது. குடும்பம் என்ற சுயநல வட்டத்தைப் பெரிதாக நினைத்து, பாவிகளின் தீவினைகளை மீண்டும் கண்டிக்காமல் இருப்பவர்களும், பாவத்தின் பங்குதாரர் களே! பாவிகளை எதிர்த்துப் போராட வேண்டும். இதனால் பாவிகளை, பின்னாளில் வரும் ரோகங்களிலிருந்து நாம் மீட்டவர்களாகிறோம்.பாவத்திற்கு எதிரான போராட்டமே புண்ணியம். பாவிகளை எதிர்க்கும் செயலே பக்தியாகும்.