பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் X 5 லேசான நாணம், இரண்டையும் ஒன்று சேர்த்த உறுதி; தணிகாசலம் ஒரு பிஸ்கட்டைக் கொறித்தபடியே செல்வத் தைப் பார்த்து, பிஸ்கட் எடுத்துக்கப்பா' என்றார். ஐந்து நிமிட இடைவெளிக்குப் பிறகு, தணிகாசலமே பேச்சைத் துவக்கினார். ஒன் பேரு என்னப்பா?’’ 4. *செல்வம், g = என்ன படிச்சிருக்கே?'

  • எம். ஏ. எக்னாமிக்ஸ்! "
இப்போ வேலை பார்க்கிறியா?"

ஆமாம் கே. ஆர். அன்ட்கோவ்ல டைப்பிஸ்டா இருக்கேன்.' பாஸ்கரன் முகத்தை சுழித்தபடியே கேட்டான், எம். ஏ. படிச்சுட்டு, போயும் போயும் டைப்பிஸ்டாவா இருக்கீங்க. s = எந்த தொழிலும் இளக்காரமுன்னு இல்ல. நம்ம நாட்ல மட்டுமில்ல உலகத்துலயும், கஷ்டமான தொழிலை செய்ய முடியாத, பிரபுக்களும், முதலாளிகளும், அப்படிப் பட்ட தொழிலையே இழிவாக்கி வச்சுட்டாங்க. நம் தமிழ் நாட்ல பனையேறுற தொழிலும், மரம் வெட்டும் தொழிலும் நெஞ்சுத் திடமும், உடம்புத் திடமும், உள்ளவங்க செய்யுற வேலை. இந்த வேலைகளை செய்ய முடியாத பண்ணையாரு களும், முதலாளிகளும் இந்தத் தொழிலைக் கேவலப்படுத்தி அந்தத் தொழிலாளிகளை... அதைவிடக் கேவலமாய் வச்சுட் டாங்க. நீங்களும் அப்படி..." பாஸ்கரன் நிமிர்ந்து உட்கார்ந்தபடியே அவனையே ப்ார்த்தான். பிறகு கேட்டான். எதுக்காக இவ்வளவு பெரிய லெக்சர் அடிக்கிறீங்க."