பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் 27 பானுமதி, கண்ணிரும் கம்பலையுமாக அவனை குனிந்து உற்றுநோக்கினாள். கண்ணிர், அவள் கண்ணில் சொட்டுச் சொட்டாகி, அவன் மார்பில் திட்டுத் திட்டாய் விழுந்தது. அவன் ஆவேசமாய் எழுந்து, அவளை அழுந்தப் பற்றிக் கொண்டான். நான் இல்லாமல், ஒன்னால இருக்கமுடியுதா பானு? என்று அவளுக்குக் கே ட் க ச த குரலில், கேட்டுக் கொண்டான். அவளோ அவனை விடப்போவதில்லை என்பதுபோல், உடலாலும் பிரியப்போவதில்லை என்பதுபோல் அவனை தன் மார்பின் கவசமாக்கிக்கொண்டாள். அப்படியும் இப் படியுமாய், ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து விலகினார்கள். அவள் ஏதோ பேசப்போனாள், அழுகை வந்தது. பிறகு கேவியபடியே கேட்டாள். நான் இல்லாமல் இருக்கிற அளவுக்கு ஒங்களுக்கு தைரியம் வந்துட்டது என்ன...?"

  • ஆமாம். அதனாலதான், இப்படி படுத்த படுக்கையாய் தாடியும் மீசையுமாய் கிடக்கிறேன்!”

இது புரி ந் த ல், நீங்க அப்பாகிட்டே, இப்படி ஏடாகோடமாய் பேசியிருப்பீங்களா...' " இப்பவும் நான் சொன்னதுக்காக வருத்தப்படல. உண்மை பேச விரும்புகிறவன். அதன் விளைவுகளுக்கும் தயாராய்த்தான் இருக்கணும் பானு! எப்படியோ...ஒன்னை பாத்துட்டேன். அது போதும் எனக்கு. ’’ அப்படின்னா, எ ன் ைன திரும்பிப் போகச் சொல்றீங்களா?" என்ன சொல்றே?"