பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் "அப்பாகிட்டே எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன்: அவர் மெளனம் சாதிக்கிறார். உங்ககிட்டே பேசினார் பாருங்க. அதுதான் அவர் பேசிய கடைசி பேச்சு. அதுக்குப் பிறகு, ஒரே மெளனமாயிட்டார். ஜாதில என்னப்பா இருக்குதுன்னு கேட்டேன். நீங்க கஷ்டப்பட்டப்போ நம்ம ஜாதில எவர்பா உதவுனான்னு கேட்டேன். கேட்டதுக் கெல்லாம் மெளனம். கோபத்துலயோ இல்ல ஆத்திரத் துலயோ... மாத்திரை சாப்பிட மறுக்கிறார். பிரஷ்ஷர் கூடிட்டு. அவருக்கு வேளாவேளைக்கு மாத்திரைகளை மட்டும் கொடுத்தேன். நம்ம பேச்சை எடுக்கிறது இல்ல. இப்போ அப்பாவுக்கு உடம்பு தேவல. உங்களை என்னால பார்க்காமல் இருக்க முடியல. ஒரு முடிவோடு, கட்டின புடவையோடு, கைவளையல்களையும், சுழற்றி வச்சுட்டுப் புறப்பட்டுட்டேன். இனிமேல் அந்த வீட்டுக்கு போகிறதா இருந்தால் ஓங்களோடுதான் போவேன்.'" இப்போ என்ன செய்யலாம் என்கிறெ.' இதுகூடவா சொல்லித் தெரியணும்... ரிஜிஸ்டர் ஆபீஸ் எந்தப் பக்கம் இருக்குது? ஏன் யோசிக்கிறீங்க. என்னை மனைவியாய் ஏற்றுக்க மறுக்கிறதுக்கு வேற சாக்கில்லையேன்னு யோசிக்கிறீங்களா?’’ இப்படிப்பட்ட ஒரு எண்ணம் ஒனக்கு வந்ததே தப்பு பானு!' அப்படின்னா என்னைக் கல்யாணம் செய்துக்க சம்மதமா...' இது என்ன கேள்வி? ஒன்னை கைவிடனு முன்னு எப்ப வும் நினைக்கல. எப்போவாவது என்னை மறந்துடுன்னு உன்கிட்டே சொல்லியிருக்கேனா?' "வாயால் எப்பவும் சொன்னதே இல்ல. ' செய்கையாலயும் காட்டியதில்லே. ஆனாலும் கடைசி யாய் சொல்றேன் பானு... நான் டைப்பிஸ்ட். ஐநூறு ரூபாய் சம்பளக்காரன். இந்த அறைதான் நம்மோட பங்களா. இந்த