பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் இனிமேல் இந்த வீடும் அம்பத்துார் பேக்டரியும் வந்தாப் போலதான்! பானு, அண்ணனை முறைத்தபடியே, கண் களை எடுக்காமல் கற்சிலையாய் நின்றாள், பதிலளிக்க முடியாத பாஸ்கரன், இடுப்பில் கைவைத்தபடி பின்னால் நின்ற மனைவியை மருவி மருவிப் பார்த்தான். அவள், அவன் இடுப்பை யாருக்கும் தெரியாமல் கிள்ளி, கண்களை சிமிக்கிச் சிமிக்கி, கையை ஆட்டி முன்னால் வந்தாள். ஒங்களுக்கு கொஞ்சமாவது மூளை இருக்குதா? சொந்த தங்கையை, கூடப்பிறந்த தங்கையைப் பார்த்தா இந்தக் கேள்வி கேட்கிறது அவளுக்கு இல்லாத வீடு ஓங்க ளுக்கு எப்படி வந்துட்டுது. அவள் கேட்டதுல என்ன தப்பு? மாமாவுக்கு நீங்க மட்டுந்தானா பிள்ளை? அப்படி யாராவது வெளியேற வேண்டுமுன்னால், அது நீங்கதான் சீ... கொஞ்சமாவது பாசத்தோட பேசத் தெரியணும்...' பானு, அண்ணியைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, ஒப்பாரியிட்டாள்; அண்ணி... அண்ணி... நான் தாய்க்குத் தாயாய் நினைக்கிற அண்ணி...நீங்க அண்ணியில்லை... எனக்கு தாய்... தாயேதான்...' என்று அரற்றினாள். மைதிலியின் மார்பில், முகம் புதைத்து கழுத்தில் கை போட்டு புலம்பினாள். அண்ணிக்காரி, தன்னருகே வந்த தன் சொந்த மகளை தலையைத் தடவியபடியே, மைத்துணியின் முதுகைத் தட்டிக்கொடுத்தபடி ஆற்றுவித்தாள். அழாதம்மா... இந்த அண்ணி இருக்கும்போது நீ எதுக்கு அழனும்? உங்க அண்ணனைப்பற்றி ஒனக்கு தெரியாதா! முரடுலையும் முரடு...சரியான முரடு. வாய்க்கும் மனதுக்கும் சம்பந்தமில்லாத பிறவி! வேணுமின்னால் பாரு... ஒன் கிட்டேயே அப்புறமாய் மன்னிப்புக் கேட்பார். தங்கச்சி, வேற ஜாதிக்காரரை கல்யாணம் செய்து, அப்பா படுக்கையில விழக் காரணமாயிட்டாளேன்னு ஆத்திரத் தி ல