பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் விட்டது. அவ்வப்போது அப்பாவைக் கொன்னுட்டனே... நானே கொன்னுட்டனே ..." என்று செல்வத்திடம் அரற்றிய பானு, குற்ற உணர்வில் இருந்து மீண்டுகொண்டிருந்தாள். அண்ணன் பாஸ்கரனும், நீ என்னம்மா செய்வே காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதைதான்’ என்று சொன்ன தில் லேசான ஆறுதல். பானுவும், செல்வமும் மாடியில்: பாஸ்கரனும் மைதிலி யும் கீழே; மற்றபடி சாப்பாடு வரவு செலவு எல்லாம் ஒன்றாகத்தான். அன்றைக்கும் செல்வம் சாப்பாட்டுப் பொட்டலத்தை கைப்பைக்குள் போட்டபடி, டைப்பிஸ்ட் வேலைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தான். குளித்துவிட்டு ஈரத்துணியால், கொண்டையைக் கட்டிப் போட்டபடி வந்த பானு அவன் தோள்பட்டையில் கிடந்த துரும்பைத் தட்டி விட்டுவிட்டு, முட்டி கைகளில் படிந்திருந்த சுண்ணாம்புக் கோலத்தை, முத்தானை யால் தேய்த்துவிட்டபடியே கேட்டாள்: நான் சொல்றது ஒங்க காதுல உறைக்கவே செய்யாதா...'

  • நெனச்சேன்... இன்னைக்கு இதுவரைக்கும் குண்டு போடாமல் இருக்கியேன்னு...'

எத்தனை நாளைக்கு இந்த டைப்பிஸ்ட் உத்தியோ கத்தைக் கட்டிட்டு அழப்போlங்க!' கட்டிட்டு இருக்கேன்... ஆனால் அழல!’ என்ன டியர் நீங்க... அம்பத்துார் பேக்டரி நிர்வாகம் சரியில்லாமல் லாஸில் போகத் துவங்கிட்டதாம்! அண்ண னுக்கு சினிமா தியேட்டரையும், கிண்டி ரேஸையும் கவனிக்கவே நேரம் இல்ல. நீங்களாவது பேக்டரி பொறுப்பை ஏற்று நடத்தப்படாதா, பேக்டரி லாஸானால், அப்புறம் வீடே லாஸ்ாகிடும்!'"