பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் 43 "ஒனக்கு எத்தனவாட்டி சொல்றது மேடம்! பிளீஸ்... என்னை ஒங்க சொத்துபத்து வம்புல இழுக்காதே! ஒன் பாடு, ஒன் அண்ணன் பாடு. எனக்குக் கிடைச்ச இந்த ஹஸ்பென்ட் உத்தியோகமே போதும்மா!' "சும்மா மழுப்பாதிங்க. எனக்கு ரெண்டுல ஒன்று இன்னைக்குத் தெரியணும். நீங்க நம்ம பேக்டரி பொறுப்பை எடுத்துத்தான் ஆகணும்.' நான் டைப்பிஸ்ட் வேலை பார்க்கிறது ஒனக்குக் கேவலமாய் தெரியுதா?' இதுல இருந்து என்னைத்தான் நீங்க கேவலமாய் நினைக்கற மாதிரி தெரியுது.' நெவர்...நெவர்...' "நான் ஒங்களைத்தான் கட்டினேன்...ஒங்க டைப்பிஸ்ட் பதவியை இல்ல!" நானும் ஒன்னைத்தான் கட்டினேன்...ஒன் அம்பத்துார் பேக்டரியை இல்ல." எனக்கும், என் புருஷன் டிப்டாப்பாய் டிரஸ் போட்டு, கார்ல போய்... ஒரு பெரிய நிர்வாகியாய் இருக்கணுங்கற ஆசை இருக்காதா? இல்ல இருக்கத்தான் கூடாதா?’’ இதுக்குப் பெயர்தான் ஆளுமை உணர்வு. இது கூடவே கூடாது. இப்போ நாட்ல பலர் பதவிக்காக, நாக்கைத் தொங்கப் போட்டுட்டு அலையறாங்க... பதவியில் கிடைக்கிற போலி மரியாதைக்காக, சுயமரியாதையையே விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்காங்க. சத்தியமாய் சொல்றேன். எனக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் கூட, நான் ஏத்துக்கமாட்டேன்."" சரியான ஆளு! யாரோ கொடுக்கப்போறது மாதிரி !'