பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் 45 சொல்லு. அதுக்காக போகாதே! இருபது வருஷமாய், இந்த வீட்டுக்குத் தொண்டு செய்த ஒன்னை, நிறுத்த யாருக்கும் உரிமை இல்ல. வா. நானே அண்ணன்கிட்டே கேட்கிறேன்!" எதுக்கும்மா என்னால ஒங்களுக்குள்ள தகராறு: ஏதோ என் தலைவிதி!' நீ பேசாமல் என் பின்னால் வா முத்தம்மா. நியாயத் துக்கு அண்ணன் தம்பி கிடையாது. ’’ பானு கணவனோடும், முத்தம்மாவோடும் கீழே இறங்கியபோது, பாஸ்கரன் கழுத்தில் டையைக் கட்டிக் கொண்டிருந்தான். பானு யதார்த்தமாய் கேட்டாள்.' "பாவம்... முத்தம்மா அண்ணா... இந்த வயசுல அவள் எங்கண்ணா போவாள். வேலையை விட்டு நிறுத்திட்டி யாமே!" ஆமாம். அவள் போக்கு சரியில்ல. ’’ இருபது வருஷமாய் வேலை பார்க்கிற ஜீவன்... எதுல அவள் சரியில்ல' எனக்கு பிடிக்கல. நிறுத்துறேன்!' குடும்ப விவகாரத்தில் தலையிடுவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த செல்வத்தால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. காரணத்தைச் சொல்லி நிறுத்தினால், அவங்க திருந் திடுவாங்க. அப்படியும் திருந்தலன்னா நிறுத்தலாம். ஏதோ ஆடு மாடை விரட்டுறது மாதிரி விரட்டுறது மனிதாபிமான மில்ல அததான்!" மாப்பிள்ளை இதை நீங்க கண்டுக்கப்படாது!" என்னை நீங்க இந்த வீட்டைவிட்டு நிறுத்தினால் கண்டுக்கமாட்டேன்! பட் ஒரு ஏழையை நிறுத்துறது என்கிறது...'