பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் 47 "எப்படியோ தொலைஞ்சு போங்க. நான் யாரையும் இனிமேல் நிறுத்தல.' மைதிலி, முத்தம்மாவுக்கு ஆணையிட்டாள். முத்தம்மா... ஏன் பிராக்கு பார்க்கிற? போய் வழக்க மாய் செய்யுற வேலய பாரு. அவரு குணந்தான் ஒனக்குத் தெரியுமே... என்கிட்டே சொல்லியிருந்தால் நானே முடிச் சிருப்பேன். நீ ஏன் அண்ணன் தங்கைக்கு இடையில் கலகம் முட்டுறே?" 'தப்புத்தாம்மா...' "சரி சரி ஒன் வேலையை போய்ப் பாரு. பானு: ரெடி யாயிட்டியா நல்லிக்கு போகணுமுன்னு சொன்னேனே மறந்துட்டியா.’’ "இதோ அண்ணி!" செல்வம், திருப்தியோடு புறப்பட்டான். பாஸ்கரன், முகத்தைத் திருப்பிக்கொண்டான், முத்தம்மா, மைதிலி முகத்தை ஆழப் பார்த்தபடியே, துடைப்பத்தை எடுத்தாள். 7 இரவு வந்தபோது, பாஸ்கரனுக்கு கோபமும் வந்தது. கழுத்தில் கைபோட்ட மனைவியை, முரட்டுத்தனமாய் தள்ளிவிட்டு, அவன் வேறு பக்கமாய் புரண்டு படுத்தான். மைதிலி அவனை பலவந்தமாய், தன் பக்கம் திருப்பப் போனாள். முடியவில்லை. பிறகு சிரித்தபடியே எழுந்து, கட்டிலின் மறுபுறம் போய், அவன் முகம் நோக்கிப் படுத்தாள். அவன் மீண்டும் மனைவிக்கு முதுகைக்காட்டப் போனபோது, அவள் அவன் தலைமுடியைப் பிடித் திழுத்தாள், பாஸ்கரன் கோபமாகக் கேட்டான்.