பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் "நீ ஒன்றும் என்கிட்டே கொஞ்ச வேண்டாம்..." 'ஏன், கொஞ்சறதுக்கு ஒங்களுக்கு வேற ஒருத்தி கிடைச்சிருக்காளா?" ஒன் புத்தி சந்தேகப் புத்தி ஒன்னை விட்டுப் போகுமா?" வலிய வாற மனைவியை உதறுற நீங்கல்லாம் ஒரு புருஷனா?’’ சொல்றபடி செய்யுற புருஷனை, காலை வாரிவிடுற நீயெல்லாம் ஒரு மனைவியா?” நான் மட்டும் ஒங்களுக்கு பெண்டாட்டியாய் வரா விட்டால் இந்நேரம், பானு ஒங்களை பந்தாடியிருப்பாள். ஞாபகம் இருக்கட்டும்.’’ ஞாபகம் இருக்கறதாலதான் கேட்கிறேன். ஆமாண்டி தெரியாமல்தான் கேட்கேன் ஒன் மனசுல என்னதான் நினைச்சுகிட்டு இருக்கே அப்பாவைப் பார்க்கவிடாமல் பானுவை தடுக்கச் சொன்னதும் நீதான். அப்புறம் எல்லார் முன்னாலயும், என்னை முட்டாளாக்கிட்டே, பொறுத்துக் இட்டேன். இன்னைக்குக் காலையில் முத்தம்மாவை நிறுத்தச் சொன்னதும் நீதான். அப்புறம் என்னை அசடாக் இட்டே. ஒன்னால எனக்கு எவ்வளவு அவமானம் பாரு, எனக்குப் பிறகு பிறந்தவள். நான் மிச்சம்வச்ச எச்சிப்பாலை குடிச்ச பானுமதிகிட்டே தோற்றுவிட்டேன். அவள் கிட்டே தோற்றது பரவாயில்லை. கேவலம் வேலைக்காரி முத்தம்மா கிட்டே முழுசாய் தோற்றுவிட்டேன். என்னை இந்த பாடு படுத்துறதுல ஒனக்கு ஏண்டி இவ்வளவு ஆசை! இதுக்கெல் லாம் இப்பவே பதில் சொல்லணும்' .ஒங்க தங்கச்சி என்னை கிள்ளுக் கீரையாய் நினைக்கற மாதிரி, நீங்களும் என்னை நினைக்கா திங்க. ஒங்களுக்கு ஒரு அவமானமுன்னால் அது எனக்கும் சேர்த்துதான். மறந்திடாதிங்க."