பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு மாதம் ஓடிவிட்டது. அன்று இரவு மணி பதினொன்று இருக்கலாம். தாங்கிக் கொண்டிருந்த செல்வம். ஒரு குலுக்கலோடு எழுந்தான். என்ன சத்தம்’ என்று சொன்னபடியே படுக்கையில் மனைவியைப் பார்த்தான். அவளைக் காண வில்லை. பானு. பானு' என்று சொன்னபடியே ஸ்விட்சைப் போட்டான். பானு இருந்த கோலத்தையும் இழே கேட்ட சத்தத்தையும் கண்ணாலும், காதாலும் உள் வாங்கிக் கொண்டவனுக்கு ஒன்றும் புரியவில்லை. நைட் கெளனோடு, கீழே தரையில் மூலையில் சாய்ந்து தலையில் கைவைத்தபடி உட்கார்ந்திருந்த பானு பார்த் தாளே தவிர, பதிலளிக்கவில்லை. செல்வம் ஓடிப்போய் அவளைத் தூக்கி நிறுத்தி, படுக்கையில் உட்கார வைத்து விட்டு, அருகே அமர்ந்தான். ஏன் பானு, ஒரு மாதிரி இருக்கே?’’ . இழே போடுற சத்தம் ஒங்க காதுல உறைக்கலியா?" அடுல்ல. கர்ணன். எனக்கு வந்த தூக்கம் ஒனக்கும் வரனும் என்று நினைக்கிறவன். இந்தச் சத்தத்தையே தாலாட்டாய் நெனச்சுட்டு தூங்கலாம்.'

நானும் எத்தனையோ சத்தத்துல தூங்குனவள்

தான்.' பிறகு ஏன் இப்போ...'