பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

у சமுத்திரத்தின் படைப்புகளிலே இவை அத்தனையும் உண்டு. வாய்மையைப் போற்றி வெஞ்சமர் புரியும் இந்தப் பேனா வீரன் எந்தச் சூழ்நிலையிலும் வளைந்து கொடுத்த தில்லை. சத்தியத்தைக் கட்டுப்பாடாக வாழ்வில் இலட்சிய மாகக் கொண்டவர், சமுதாயத்திலுள்ள கதிகாரர்களைச் சாம்ப லாக்கி சூதாடிகளைக் கழுவிலேற்றிடும் வரை சமர் புரிவேன், சத்தியத்திற்குக் க ட் டு ப் ப டு வே ன் என்று சூளுரைக்கும் இளைஞர். 'சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்" என்ற தலைப்பைப் பார்த் ததும் அச்சுறுத்துகிறாரோ என்று பயந்தேன். இன்றைய உலகில் சத்தியம் துன்பத்தைத் தருகிறது! சோதனைக் குள்ளாக்குகிறது உண்மை பல நேரங்களில் புதைக்கப்பட்டு ஆர்ப்பாட்டங்களே மிஞ்சும் காலமிது. உண்மை" ஒரிருவர் அறிந்த சொல்-ஊழல் உலகிலுள்ளோர். அத்தனைபேரும் ஜெபிக்கும் மந்திரம். சிந்தையிலே ஊழல், செயலிலே ஊழல், வாழ்விலே ஊழல்-ஏன் வையகம் முழுவதையுமே ஊழல் சேற்றிலே அமுக்கி, மனித இனத்தையே மரணக் குழியிலே போட்டு மூடும் மாபாதகம் பெருகி வருகிறது. இந்த கோர முடி வினினின்றும் சமுதாயம் விடுபட வேண்டுமானால் சத்தியத் திற்கு நாம் கட்டுப்பட்டால் போதும். சத்தியத்துக்குக் கட்டுப்படுவது கடினம்தான். அண்ணல் காந்தி அடிகளும் தனது வாழ்க்கைச் சரிதத்தை சத்திய சோதனை' என்றே அழைத்தார். சத்தியம் சோதிக்கும். ஆனால் முடிவில் சாதிக்கும். வெற்றி வாகை சூடும்போது பட்ட துன்பமெல்லாம் பறந்துபோகும். இமாலயச் சாதனை ஒன்றைப் புரிந்துவிட்ட பெருமை, இன்பமே சூழ்ந்திருந்து இந் நிலவுலகே சுவர்க்கமாகும் மேன்கிலை-இத்தனையும் தோன்றும். இன்றையச் சமுதாயத்தின் சீரழிவிற்கு பல காரணங்கள் உண்டு-ஆனால் எளிதில் தெரியாத ஆலகால விஷமாகப்