பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் தங்கையின் முகத்தாட்சண்யத்திற்காக, செல்வம் மறு மொழி கூறாமல் புறப்பட்டான். இருவரும் ஆட்டோவில் ஏறினார்கள். அவர்களோடு புறப்படப்போன பாமாவை அடக்கியபடியே, ைம தி லி டாடா' காட்டினாள். செல்வம் அவளுக்குத் தெரியாமல், பானுவின் முதுகை கிள்ளினான். அவள் எப்பா..." என்று சொன்னபடியே உடம்பை நெளிந்தபோது, ஆட்டோ, பிராண்டல் சத்தத் தோடு பறந்தது. எதுக்காக என்னைக் கிள்ளினிங்க!' பின்ன என்ன, படிக்கப்போனவனை, ம ட க் கி ப் போட்டுட்டியே! மைதிலியைத் துரண்டிவிட்டு மடக்கிப் பிட்டியே!” "அதுக்கு இப்படியா கிள்ளறது? என்னம்மா வலிக்குது."

  • * 6msfrffl 1* * "அது இருக்கறதுனாலதான் முதுகு பிழைச்சுது. இல்லன்னா சதை பிஞ்சிட்டுருக்கும்.'

வேணுமுன்னால் பதிலுக்குக் கிள்ளிடு. ’’ • சீ... பேச்சைப் பாரு. டிரைவர் ஆட்டோவை ஸ்லோ பண்ணி நாம் பேசுறதை கவனிக்றார் பாருங்கோ!' இருவரும் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, கடற் கரைக்கு வந்தார்கள். வழக்கமாக உட்காரும் இடத்தி லேயே ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்தபடியே, பேச்சற்று மனதால் மானசீகமாய் பேசியபடி கிடந்தார்கள். பழைய சல்லாபங்களையும் சர்ச்சைகளையும் தர்க்கங்களையும், தத்துவங்களையும் மனதுக்குள் நிறைவோடு நினைத்து, தத் தமக்குள்ளேயே பேசிக்கொண்டார்கள். பானு எழுந்தாள். அவன் பேசாமல் இருப்பதைப் பார்த்துவிட்டு, உம் எழுந்திருங்க' என்றாள்.