பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் "பானு, பானு, ஏய் பானு...' பதிலில்லை. அவள் கோபமாய் இருப்பதைப் புரிந்துகொண்டான். பானுவைச் சிரிக்க வைக்க வேண்டும். எப்படி? கடல் மண்ணில் அவள் என்னை நெடுஞ்சான் கிடையாய் இழுத்ததுபோல் நானும் இப்போ இழுக்க வேண்டும். 'அய்யோ... விடுங்க" என்று அவள் வாய்விட்டு சிணுங்குவது வரைக்கும் இழுக்க வேண்டும். ஏய், பானு... என்னமாய் இழுத்தே. இதோ பார்...' செல்வம், குனிந்து அவள் கால்களைப் பற்றி இழுத் தான். அவள் முரட்டுத்தனமாய் உதைப்பதைப் பார்த்து, லேசாய் திகைப்படைகிறான். அவன் இழுக்க இழுக்க, அவள் கால்களை உலுக்க உலுக்க, ஒரு நிமிட ஊடல், பிறகு அய்யோ...விடுங்க” என்ற செல்லச் சிணுங்கலுக்குப் பதிலாக ஆங்... ஊங்..." என்ற ஆவேசக் கூச்சல். பாஸ்கரன் ஸ்விட்சைத் தட்டினான். மின்னொளியில் அந்தப் பொன்னொளியைப் பாவித்தான். வாயில் கோளை: கால்களும், கைகளும் வெட்டிக்கொண்டு போயின. கண்கள் நிலைக்குத் தி நின்றன. அவன் நிலையிழந்து நின்றபோது, அவள் அவன் பக்கமாய் முண்டியடித்தாள். அவனைப் பார்த்து கைகளை லேசாய் ஆட்டினாள். அவன் ஸ்தம்பித்து தள்ளி நின்று பானு...' என்று குரலிட்டபடியே, பிறகு அவள் தோளைப் பிடித்து குனிந்தபோது, அவன் கழுத்தை, அவள் கைகளால் கட்டிக்கொண்டாள். பிறகு தன் மார்போடு சேர்த்து அவனைத் தழுவிக்கொண்டாள். கால்கள் கட்டிலை உதைத்துக்கொண்டன. அப்புறம் கைகள் தொப்பென்று விழுந்தன. கால்கள் விறைத்தன. கண்கள் அரைவட்ட நிலையில் நின்றன. செல்வம், அவளை எழுந்து பார்த்தான். அவள்மேல் விழுந்து பார்த்தான். சற்றே விலகிப் பார்த்தான். பிறகு