பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் 69 சுந்தரம், அவனைத் துரக்கி நிறுத்தினார். அவனை , தனது காலோடு காலாக்கி, கையோடு கையாக்கி, நடத்தி னார். பானு புதையுண்ட இடத்தை, பரிதாபமாய் பார்த்த படியே, அவன் அசைவற்று நடந்தான். சுந்தரத்தின் இழுத்த இழுப்பிற்கு இசைந்தபடி நடந்தான். பழுதுபட்ட காரை, பழுதுபடாத காரில் கயிறு கட்டி இழுப்பார்களேஅப்படி தரையில் கால் உராய, சுந்தரம் அவனை இழுத்துக் கொண்டே போனார், சுந்தரம், அவனை வீட்டிற்குக் கூட்டி வந்தபோது, அந்த வீட்டின் கேட் பூட்டப்பட்டிருந்தது. உள்ளே பெரிய பூட்டு! சுந்தரம் கத்தினார். பாஸ்கரன் சார்... பாஸ்கரன் சார்...” பாஸ்கரன் ஸாரும் அவர் பத்தினியும், போர்டிகோ பக்கம் வந்தார்கள். முத்தம்மா, புல்பரப்பின் ஒரு மூலையில் கைபரப்பி நின்றாள்.

  • பாஸ்கரன் சார்... கேட்டைத் திறங்க!'

பாஸ்கரன் கம்பீரமாய், தன் பத்தினியைப் பார்த்த படியே கர்ஜித்தான். எதுக்காகத் திறக்கணும்? என் தங்கையே போயின பிறகு இவன் எதுக்கு? இவன் கால்பட்டு அப்பா போயிட் டார். அருமைத் தங்கை போயிட்டாள். இனிமேல் நாங்க ளு ம் போகனுமா?’’

  • என்ன சார் சொல்றீங்க?"
எங்கே வந்திங்கன்னு கேட்டேன்!'

• • &тrf...** சொல்றதை நல்லா கேளுய்யா! எ ப் போ என் தங்கையின் பிணம் இந்த வீட்டை விட்டுப் போச்சுதோ, அப்பவே இவனும் இவன் உறவும் போயிட்டுது. இது ஒரு