பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VI பரவி நிற்பது-அடுத்தவரை அடக்கியாள வேண்டுமென்ற வெறி, அராஜகத்திற்கு அஸ்திவாரமிட்டு அநீதிச் சுவர் எழுப்பி அகியாய சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறது. கு டு ம் பம், அரசியல், சமூகம், வணிகம் அத்தனைக்கும் இது பொருந்தும், 'ஆளுமை உணர்வு' எத்தனை கொடிய நஞ்சை கிடுக்கிப் பிடியில் அடக்குவதுபோல் இரண்டே சொற்களில் வெளிக் கொணர்ந்துவிட்டார் சமுத்திரம். புற்றிலிருந்த பாம்பை பலர் காணக் காட்டிவிட்டார். மனித சமுதாயம் இந்த ஆளுமை உணர்விலிருந்து விடுபட்டால்தான் அமைதியும் ஆனந்தமும் பெற முடியும். இரணகளரிகளிலிருந்து, இரத்தச் சேற்றிலிருந்து கரையேற ஒரே வழிதான்-சத்தியத்திற்குக் கட்டுப்படுவது. சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமானால் மனதில் தூய்மை வேண்டும்-தணிகாசலத்தைப்போல. ஆ ன ல் தணிகாசலத்திடம தூய்மை இருந்ததே தவிர துணிவு இல்லை. அதனால்தான் சோதனை! நமக்கு இரண்டும் வேண்டும், சமுத்திரம் இலட்சியத்திற்காக எழுத்தைத் தொட்டவர். எளிய நடையிலே ஏற்றமிகு கருத்துக்களை எடுத்துச் சொல் கிறார். தேசியம் வேரூன்ற வேண்டும்-தேமதுரத் தமிழ் பட்டி தொட்டியெல்லாம் பரவ வேண்டும் என்று வாதிடுபவர். தேசிய அரசு 1947-ல் ஏற்பட்டதாலேதான் முதன் முறை யாக தமிழ் கட்டாய பாடமாகக் கல்விக்கூடங்களிலே வந்தது. தமிழ் நாட்டு மாணவன் தமிழ் படிக்காமலேயே தாய்மொழியைத் தூக்கியெறிந்துவிட்டு பட்டம் பெற முடியும் என்ற அவல கிலையைப் போக்கியவர் திரு. ஓமந்துர் ராமசாமி ரெட்டியார். தமிழ்த் தலைநகரில் பொறுப்பேற்ற முதல் தேசிய முதலமைச்சர். அன்னைத் தமிழ் அரியணையிலேறியது கர்ம வீரரின் காலம். பட்டிதொட்டிகளிலே பாமரர்கள், பாட்டாளிகளின் மத்தியிலே