பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் வழிப்பாதை. ஆண்டவனே நெனச்சாலும் இவனை, இங்க இந்த வீட்ல சேர்க்க முடியாது. பட்டது போதும். அவன் எங்கே வேணுமுன்னாலும் போகட்டும். இங்கேதான் வரப் படாது!" 'இது அயோக்கியத்தனம் சார்! பெண்டாட்டி சொத்துல இவருக்கு உரிமை உண்டு." அதைக் கோர்ட்ல பார்த்துகிடச் சொல்லு. அப்புறம் ஒரு விஷயம். நாளையில் இருந்து நீங்க பேக்டரி போக வேண்டாம்! ஒங்களை டிஸ்மிஸ் செய்துட்டேன்!' சுந்தரம் கொதித்தார். யார் விட்டாலும் நான் ஒன்னை விடப்போவதில்லை! பேக்டரி பதவி, பிசாத்து வேலை. எனக்கு வேண்டாம். ஆனால் இவருக்கு மனைவி மூலம் கிடைக்க வேண்டிய சொத்தை நான் வாங்கிக் கொடுக்காவிட்டால், என்பேர் சுந்தரம் இல்லை." "யோவ் மரியாதையா போlயா... போக வைக்கணுமா? இந்த வீட்ல இவனுக்கு இடம் கிடையாது, ஒங்களால ஆனதை செய்யுங்க!' சுந்தரம், அவனை முறைத்துப் பார்த்தார். அவன் முறைத்தானோ என்னவோ, எப்போதும் கணவனுக்கு திருத்தம் கொடுக்கும் மைதிலி, சுந்தரத்தை கொடுரமாய் முறைத்தாள். முத்தம்மா, கண்களைத் துடைத்துக்கொண் டிருந்தாள். சுந்தரம் புரிந்துகொண்டார். புரிந்துகொள்ளும்படி முறைக்கப்பட்டார். "வாங்க ஸார்...போலீஸ்ல கம்பளயின்ட் கொடுப்போம்.’’ என்று சொன்னபடியே செல்வத்தை நகர்த் தினார். அவனோ, எப்போதோ செத்துப்போனவன் போல், நாலுபேர் தள்ளும் கோவில் தேர்போல், அவன் தள்ளத் தள்ள நடந்தான்.