பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சு. சமுத்திரம் தைப் புரிந்துகொண்ட மோகினி பேசாம அங்கேயே உட் காருங்க" என்பது மாதிரி வலதுகையைத் துக்கி, விரல்களை தாழ்த்தி ஒரு அழுத்தங் கொடுத்தாள். அந்த சமிக்ஞை. யைப் போலீஸ்காரர் பார்த்தபடி என்பது மாதிரியும், அந்த சிவப்புத் தொப்பியைப் பார்த்தாள். சிவப்புத் தொப்பிக்கும். புரிந்திருக்க வேண்டும். இல்லையானால் தொப்பியைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு, வேறு எதற்கோ நகரப் போனவர்போல் அவர் இன்னொரு ரோவில் போய் உட் கார்ந்திருக்க மாட்டார். சீனிவாசனுக்கு அவளருகே உட்கார வேண்டும் போலி ருந்தது. அப்படி அவன் உட்காருவான் என்று நினைத்தவள் போல், பாதி இடத்தை வேகன்ஸியாக வைக்காமல் மோகினி படர்ந்து உட்கார்ந்திருந்ததன் மர்மம், போலீஸ், காரருக்குப் புரிந்தது. சாதுவான முகபாவத்துடனும், சந்தன நேர்த்தியுடனும், கொஞ்சம் நோஞ்சான்போல் தோன்றி னாலும், களை காட்டும் நயனத்துடன் தோன்றிய சீனிவாசனை மோகினியுடன் மனதுக்குள் ஜோடி சேர்த்து, போலீஸ்காரர் திருப்திப்பட்டுக் கொண்டார். பஸ் மெரீனா ஸ்டாப்பிங்கில் நின்றது. முதலில் இறங்கிய சீனிவாசன், இறங்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், அந்த ஸ்டாப்பில் ஏறிய ஒருத்தியின் கைக்குழந்தையின் கன்னங்களைச் செல்லமாகக் கிள்ளிக்கொண்டு, தன்னை மறந்து நின்ற மோகினியை கண்ணடித்தான். இறங்கு... என்பது மாதிரி, தலையை ஏற்றி இறக்கி ஆட்டினான். ஆனால் மோகினியோ, அந்தக் குழந்தை சிரிப்பதில் தன்னை மறந்து, அதன் உதடுகளை கையால் அழுத்திக்கொண்டிருந் தாள். டிரைவர், சீனிவாசன் கையைக் காலை ஆட்டுவதைப் பார்த்தார். பயல் இங்கயே நிக்கட்டும்... நாம ஆக்ஸி லேட்டரை அழுத்தலாமா' என்றுகூட நினைத்தார்.